Advertisment

அமெரிக்க பங்களா டூர்: இது வெறும் வீடு அல்ல... மகன் மீதான நெப்போலியன் காதல்!

இந்த வீட்டின் தியேட்டரில் தனது சில புகைப்படங்களை வைத்துள்ள நெப்போலியன் மகன்கள் வரைந்த ஓவியங்களை ஆங்காங்கே காட்சிபடுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
அமெரிக்க பங்களா டூர்: இது வெறும் வீடு அல்ல... மகன் மீதான நெப்போலியன் காதல்!

அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட தமிழ் நடிகர் நெப்போலியன் ஹோம் டூர் தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நெப்போலியன். இளம் வயதில் தனது முதல் படத்திலேயே வயதானவர் கெட்டப்பில் நடித்து அசத்திய நெப்போலியன் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நகரில், சின்னத்தாயி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தார்.

இதில் ரஜினிகாந்துடன் இவர் நடித்த எஜமான் படத்தில் கொடூர வில்லனாக நடித்த இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது. வில்லனாக நடித்து வந்த நெப்போலியன் 1994-ம் ஆண்டு வெளியான சீவலபெரி பாண்டி என்ற படத்தின் மூலம் நாயகான அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எட்டுப்பட்டி ராசா, கிழக்கும் மேற்கும், கலகல்ப்பு, வீட்டோட மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும் கமலுடன் விருமாண்டி, தசவதாரம், சரத்குமாருடன் தென்காசிப்பட்டினம், ஐயா, சீமராஜா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கடைசியாக தமிழில் அன்பறிவு என்ற படத்தில் நடித்திருந்தார். அரசியலில் இருந்த நெப்போலியன் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர்.

இதனிடையே தற்போது அமெரிக்காவில் குடும்பத்துட்ன் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன் அங்கே விவசாயம் செய்து வருவதாக பல வீடியோகள் வெளியானது. அமெரிக்காவில் 11 வருடங்களுக்கு முன்பு செட்டில் ஆன நெப்போலியன் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். பிரபல யூடியூபரான இர்பான் தற்போது நெப்போலியனியன் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு தனது வீட்டை சுற்றி காட்டியுள்ளார் நெப்போலியன்.

இர்பான்ஸ் வியூ என்ற யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில, தனது வீட்டில் நுழைவு வாயில், பெட்ரூம், சமையல் அறை உள்ளிட்ட பல பகுதிகளை சுற்றி காட்டியுள்ளார். 12 ஆயிரம் ஸ்கொர் பிட் அளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில், பல அறைகளும், லிப்ட் வசதியும் உள்ளது. மேலும் வீட்டுக்கு சின்ன தியேட்டரும், அடுத்தப்படியாக பாஸ்கட் பால் மைதனமும் அமைந்துள்ளது. வீட்டுக்கு வெளியில் அழகான நீச்சல் குளம் உள்ளது.

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தனி அறை, தனியாக வாஷிங் மிஷின் வீட்டின் உள்ளே சென்றால் எங்கு இருக்கிறோம் என்று நமக்கே தெரியாத அளவிற்கு பெரிய வீட்டில் குடியேறியுள்ளார் நெப்போலியன். அதேபோல் வீட்டில் உள்ள அனைவருக்கு தனியாக கார், மற்றும் குடும்பத்தினர் அனைவரும் செல்வதற்காக தனியார் ஒரு ஃபெமிலி கார் என அனைத்தையும் விவரிக்கிறார் நெப்போலியன்.

மேலும் இந்த வீட்டின் தியேட்டரில் தனது சில புகைப்படங்களை வைத்துள்ள நெப்போலியன் மகன்கள் வரைந்த ஓவியங்களை ஆங்காங்கே காட்சிபடுத்தியுள்ளார்.தான் ஒரு பாஸ்கட் பால் ப்ளேயர் என்பதால், தனக்கு இந்த வீடு மிகவும் பிடித்ததாகவும், ஆனால் தசை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட தனது மகனின் வசதிக்காக வேறு வீடு வாங்க முயற்சித்ததாகவும் கூறியுள்ள நெப்போலியன், எனது இளைய மகனுக்கு பாஸ்கட் பால் மிகவும் பிடிக்கும் அவன் சொன்னதால் தான் வாங்கினேன். அவனுக்காக வாங்கினாலும், பெரிய மகனுக்காக வீட்டில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

publive-image

தசை சிதைவு பிரச்னையால் பாதிக்கப்பட்ட தனது மகனை மிகுந்த சிரத்தை எடுத்து தந்தையாகவும் தாயாகவும் இருந்து கவனித்து வருகிறார் நெப்போலியன். தமிழகத்தில் பெரிய மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் திருப்தி ஏற்படாததால் அமெரிக்காவில் செட்டிலாகி மகனை கவனித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment