Advertisment

அஜித் மச்சினன் ரிச்சர்ட் மேலே சாய்ந்து ரொமான்ஸ் பண்ணும் யாஷிகா: களை கட்டும் காதல்

ரிச்சர்ட் ரிஷி, தமிழ் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதல் வைரஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
Richard Rishi

ரிச்சர்ட் ரிஷி - யாஷிகா ஆனந்த்

நடிகர் அஜித்தின் மச்சானும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷி நடிகை யாஷிகர் ஆனந்தை காதலிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது இருவரும் ரொமான்டிக் போசுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோவாக அறிமுகமானவர் ரிச்சர்ட் ரிஷி. நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி, தமிழ் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதல் வைரஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து நாளை, கிரிவலம், யுகா, உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரிச்சர்ட் ரிஷிக்கு எந்த படங்களும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனாலும் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ரிச்சர்ட் ரிஷிக்கு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்கள் நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் வெற்றியை கொடுத்ததால் தற்போது கதை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.

Richard Rishi1

ரிச்சர்ட் ரிஷி - யாஷிகா ஆனந்த் ரொமான்டிக் புகைப்படம்

தற்போது 45 வயதாகும் ரிச்சர்ட் ரிஷி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை ரகசியம் காத்து வந்த நிலையில், சமீபத்தில் யாஷிகா ஆனந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் இருவரும் காதலிப்பதாக இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், யாஷிகா அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து இருவரின் காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதனிடையே ரிச்சர்ட் – யாஷிகா இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் நிலையில், யாஷிகா ரிச்சர்ட் மீத படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த ரொமான்டிக் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் களைக்கட்டும் காதல் என்று இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.45 வயது ரிச்சர்ட் ரிஷி 23 வயது யாஷிகாவின் காதல் இணையத்தில் ட்ரெண்டாக மாறியுள்ள நிலையில் திருமணம் எப்போது என கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment