பிக்பாஸில் நுழைந்த சஞ்சீவ் : விஜயகுமார்- மஞ்சுளா குடும்ப வாரிசா? பலரும் அறியாத உண்மை

Tamil Cinema Update : மெட்டிஒலி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த அவர் சினிமா மற்றும் சீரியல் இரண்டிலுமே நெகடீவ் கலந்த கேரக்டரிலேயே நடித்திருந்தார்.

Tamil Biggboss Season 5 Sanjeev Update: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஒரு சிலரை தவிர அனைவருமே புதுமுகங்கள் மற்றும் அதிக பெண் போட்டியானர்கள் கலந்துகொண்டனர். தற்போது வரை 78 நாட்கள் முடிந்துள்ள நிலையில். நிகழ்ச்சியில் இருந்து 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த நடிகர் சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகியோருடன் சேர்த்து மொத்த 10 போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இதில் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பராக தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்டுள்ளவர் நடிகர் சஞ்சீவ். ஆனால் அவரது சகோதரியும் ஒரு நடிகை என்பதும், இவர் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு தகவலாக உள்ளது.

மேலும் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள அன்பறிவு படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது பேசிய அந்த படத்தின் இயக்குநர் அஸ்வின் தான் சஞ்சீவின் உறவினர் என்று கூறியிருந்தார். அப்போது பேசிய நடிகர் சஞ்சீவ், தனது அக்கா இறந்தவுடன் அவரது மகளை ஒரு நல்ல இடத்தில் கட்டிக்கொண்டுக்க வேண்டும் என்ற பொறுப்பு இறுந்ததாகவும். தான் அஸ்வினை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் உண்மையில் சஞ்சீவின் அக்கா யார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவல். ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகியிருந்த நடிகை சிந்து தான் சஞ்சீவின் அக்கா. பழம்பெரும் நடிகரான மஞ்சுளா விஜயகுமாரின் சகோரியாக ஷியாமளாவின் மகள்தான் சிந்து. அவரது மகன் சஞ்சீவ். அருண்பாண்டியன் மற்றும் ராம்கி நடித்த இணைந்த கைகள் படத்தின் மூலம் அறிமுகமான சிந்து, தொடர்ந்து பட்டிக்காட்டு தம்பி, பரப்பரை, சின்னத்தம்மி, கிரி, பிஸ்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக சரத்குமார் நடித்த ஐயா படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவியாக நடித்திருப்பார். ஆனால் இவர் இறந்த பிறகுதான் இந்த படம் வெளியானது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சிந்து சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து சீரியலில் நடிக்க தொடங்கினார்.

மெட்டிஒலி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த அவர் சினிமா மற்றும் சீரியல் இரண்டிலுமே நெகடீவ் கலந்த கேரக்டரிலேயே நடித்திருந்தார். ஆனால் நிஜத்தில் நல்ல மனிதரான இவர், கடந்த 1995-ம் ஆண்டு ரகுவீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அடுத்து 1996-ம் ஆண்டு இவருக்கு பெண்குழந்தையும் பிறந்ததது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சி்ந்து, இதற்காக பல சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏறபட்ட சுனாமியால் தமிழகமே ஸ்தம்பித்து இருந்த இருந்த நேரத்தில் பலரும் உதவிக்கரம் நீட்டினர். அந்த சமயத்தில், சுனாமியால் அவதிப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட சென்றார். இப்போது கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறால் அவதிப்பட்ட அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிந்து உயிரிழந்தார். 33 வயதில் சிந்து இறக்கும்போது அவரது மகளுக்கு ஒன்பது வயதுதான். அன்றில் இருந்து அக்கா மகளுக்கு தந்தையான சஞ்சீவ் அவரை தனது மகளைப்போல் பார்த்து வளர்த்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil actor sanjeev biggboss season 5 his sister sindhu update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express