டீச்சர் அழகா இருந்தாங்க, அதனால் படிப்பில் கவனம் போகல: பிரெஞ்ச் படிக்க போன சரத்குமார் சுவாரஸ்ய அனுபவம்!

ப்ரெஞ்ச் மொழயை கற்றுக்கொள்ள சென்ற நடிகர் சரத்குமார் அங்கு நடந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ப்ரெஞ்ச் மொழயை கற்றுக்கொள்ள சென்ற நடிகர் சரத்குமார் அங்கு நடந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
sarathkumar

இந்திய மொழி மட்டும் இல்லாமல் ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது அப்பா சொன்னதால், ப்ரெஞ்ச் மொழயை கற்றுக்கொள்ள சென்ற நடிகர் சரத்குமார் அங்கு நடந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

1988-ம் ஆண்டு வெளியான கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் சரத்குமார். அதன்பிறகு விஜயகாந்த் நடித்த புலன்விசாரணை உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருந்த இவர், ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார், இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றிப்படங்களாக மாறியுள்ளது,

குறிப்பாக சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, சிம்மராசி உள்ளிட்ட படங்கள், தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக இன்றும் சரத்குமாருக்கு தமிழ் சினிமாவின் அடையமாக இருக்கிறது. தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சரத்குமார் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஜக்குபாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பிறகு முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கிய சரத்குமார், தற்போது பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் படத்தில் கூட சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி, பத்திரிக்கையாளர் என பன்முக திறமைகள் கொண்ட சரத்குமார், தான் பிரெஞ்ச் மொழி கற்றுக்கொள்ள சென்றபோது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். என் அப்பா எதாவது ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள், அப்போது தான் ஒரு இன்டர்பிரேட்டராக கூட ஆகலாம் என்று சொன்னார். 

Advertisment
Advertisements

மேலும், ரஷ்யன் கத்துக்கோ என்றும் அவரே சொன்னார். அதன்படி நான் முதலில் சைனிஸ் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் பிரெஞ்ச் கற்றுக்கொள்ள சென்றுவிட்டேன். அங்கு பிரெஞ்ச் கற்றுக்கொடுக்க வந்த டீச்சர் ரொம்ப அழகாக இருந்தார். அதனால் கவனம் அவர் மீது திரும்பியது. பிரெஞ்ச் மீது கவனம் போகவில்லை. அதனால் அங்கிருந்து ரஷ்யன் க்ளாஸ் போனேன் என்று கூறியுள்ளார். ஜெயா டிவியில் சுஹாசினி நேர்காணலில் சரத்குமார் பேசிய இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

R Sarathkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: