scorecardresearch

யார் கண் பட்டதோ? சர்ச்சையாக வெடித்த விஜய்- சங்கீதா டைவர்ஸ் வதந்தி

விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள படம் வாரிசு. தில்ராஜூ தயாரித்துள்ள இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார்.

யார் கண் பட்டதோ? சர்ச்சையாக வெடித்த விஜய்- சங்கீதா டைவர்ஸ் வதந்தி

வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு தனது மனைவியை அழைத்து வராததால் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள படம் வாரிசு. தில்ராஜூ தயாரித்துள்ள இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் ஜனவரி 11-ந் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. படத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதே சமயம் விஜய் இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு தனது மனைவியை அழைத்து வராதது பலரின் கேள்விகளை எழுப்பியது. அதோடு மட்டுமல்லாமல் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகன நிலையில், விக்கிபீடியா பக்கத்திலும் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதாக தகவல் மாற்றப்பட்டது.

1999-ம் ஆண்டு தனது ரசிககையாக இருந்த சங்கீதாவை திருமணம் செய்துகொண்ட நடிகர் விஜய்க்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில், திருமணமாகி 22 வருடங்களுக்கு பிறகு விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பு இயக்குனர் அட்லியின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனியாக வநச்து கலந்துகொண்டது இந்த வதந்திக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே சமயம் இந்த தகவல் குறித்து பலரும் கேள்வி எழுப்ப தொடங்கிய நிலையில், இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

விஜயின் நெருங்கிய வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது, சங்கீதா தனது மகள் மற்றும் மகனுடன் அமெரிக்காவில் இருப்பதாகவும், அதனால் தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட விஜய் ரசிகர்கள் சற்று ரிலாக்ஸாக உள்ளனர்.  

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actor vijay divorce his wife sangeetha rumour clarified

Best of Express