Advertisment

பாக்கியலட்சுமி சீரியல் பாக்யா-வா இது? மேக் அப் இல்லாத போட்டோல பாதி வயசு குறைஞ்சாப்ல இருக்காங்க!

கணவனுக்கு பயந்து கிடந்த பாக்யா இப்போது கணவன் இல்லாத நிலையில் தைரியாக அனைத்து பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா தற்போது மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் இணயைத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் லைக்ஸ் குவித்து வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாக்யா கோபி ராதிகா இந்த 3 கேரக்டர்களுக்கு இடையில் நடக்கும் மோதலை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில் பாக்யா கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்காவே இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். கணவனுக்கு பயந்து கிடந்த பாக்யா இப்போது கணவன் இல்லாத நிலையில் தைரியாக அனைத்து பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகிறார். தனது குடும்பத்திற்காக எதையும் செய்யும் ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கைதான் பாக்கியலட்சுமி.

ரசிகர்கள் மத்தியில் சுசித்ரா நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமூகவலைதளங்களில் அவருக்கான ஃபாலோயர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளுக்கு லைக்ஸ் கமெண்ட் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை சுசித்ரா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சுத்தமாக மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் கவனம் ஈர்த்து வரும் நிலையில், இதிலும் நன்றாக இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment