நடிகை த்ரிஷாவின் காதலருடன் டேட்டிங் செய்தது உண்மை தான் என்று பிரபல நடிகை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது தற்போது இணையத்தில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக த்ரிஷா சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது விஜயுடன் லியோ படத்தில் நடித்து வரும் த்ரிஷா நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா கடந்த 2015-ம் ஆண்டு தொழிலதிபர் வருண் மணியன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொள்வதற்காக நிச்சயதார்த்தம் செய்தார். ஆனால் சில மாதங்களில் இருவரும் பிரிந்த நிலையில், நிச்சயதார்த்தம் முறிவு என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா தற்போதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
இதனிடையே த்ரிஷாவின் முன்னாள் காதலரான வருண் மணியனுடன் நடிகை பிந்துமாதவி டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது வருண் மணியனுடன் டேட்டிங் செய்வது உண்மைதான் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை பிந்துமாதவி கூறியுள்ளார்.
Advertisment
Advertisement
ஆவக்காய் பிரியாணி என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிந்து மாதவி சேரனின் பொக்கிஷம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜாக்சன் துரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் தெலுங்கில் நியூசென்ஸ் என்ற வெப் தொடரில் நடித்து வரும் பிந்து மாதவி இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பலந்துகொண்டார். அப்போது அவரிடம் வருண் மணியனுடன் டேட்டிங் குறித்து கேட்டபோது, உண்மைதான் வருண் மணியனுடன் டேட்டிங்கில் இருக்கிறேன். த்ரிஷா அவரை விட்டு பிரிந்த பிறகுதான் நான் டேட்டிங் செய்தேன் என்று கூறியுள்ளார். அரசியல் மற்றும் பத்திரிக்கைத்துறை குறித்து திரைக்கதை அமைப்பட்டுள்ள நியூசென்ஸ் வெப் தொடர் வரும் 12-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“