Advertisment

அழகான ஓவியம் தான்... ஆனா ஒன்னு மட்டும் மிஸ்ஸிங் : தர்ஷா குப்தா வைரல் க்ளிக்ஸ்

சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள தர்ஷா குப்தா கடந்த 2021-ம் ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dharsha Gupta

தர்ஷா குப்தா

சின்னத்திரை சீரியல் மூலம் அறிமுகமாகி தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் முள்ளும் மலரும் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. தொடர்ந்து மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றிருந்தார்.

publive-image

சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள தர்ஷா குப்தா கடந்த 2021-ம் ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

publive-image

இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் வசூலில் வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்த இவர், தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் க்ளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் அதிகமான நெட்டிசன்கள் தொப்புள் மோதிரம் காணவில்லை என்று கமெண்ட் செய்துள்ளனர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dharsha Gupta
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment