மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தனக்கு நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறித்து நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
90 காலக்கட்த்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் நடிகை கஸ்தூரி. தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சக நடிகர்கள் குறித்து தனது சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் சில சமயங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களையும் கூறி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனது.
ஆனால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு நெஞ்சு வலிப்பதாக தரையில் படுத்து அழுத காட்சிகள் இணையத்தில் படுவைராலாக பரவியது. இதனைத் தொடர்ந்து சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து கிண்டல் செய்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, ‘செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார்? ரெய்டு போகும்போது அமலாக்க துறை மற்றும் வருமான துறை அதிகாரிகளோடு மருத்துவர்களும் அவசியம் செல்ல வேண்டும். இந்திய அரசியல்வாதிகள் வலுவில்லாத இதயங்களை கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சிறைச்சாலையிலும் இதயத்திற்கு சிறப்பு சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
காவலர்கள் இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பயிற்சி பெற வேண்டும். மேலும் போலீஸ் ஜீப்புக்கு பதிலாக கைது செய்த பின் ஆம்புலன்ஸ் பயன்படுத்தலாம் என்று பதிவிட்டு செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், வழக்கம்போல் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil