Advertisment

புற்றுநோய் பாதிப்பு… கைவிட்ட கணவர்…லைஃப் பார்ட்னர்- தாய்மை பற்றி மனம் திறந்த மனிஷா கொய்ராலா

பல இந்தி படங்களில் நடித்த இவர், 1995-ம் ஆண்டு வெளியான மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manisha

நடிகை மனிஷா கொய்ராலா

தனக்கு அற்புதமாக பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் இருந்தாலும் ஒரு வாழ்க்கை துணை இருந்திருந்தால் எனது வாழ்க்கை மேலும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று யோசிக்க தோன்றுவதாக நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

Advertisment

நேபாள நாட்டில் பிறந்தவரான மனிஷா கொய்ராலா கடந்த 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான சவுதாஹர் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்த இவர், 1995-ம் ஆண்டு வெளியான மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு முதல்வன், உயிரே, இந்தியன், ஆளவந்தான் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மனிஷா தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு சாம்ரட் தாஹல் என்பவரை திருமணம் செய்துகொண்ட மனிஷா கொய்ராலா 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார், அதே சமயம் 2012-ம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இதனிடையே சமீபத்தில் தனது தாய்மை மற்றுமு் தோழமை குறித்து பேசிய மனிஷா கொய்ராலா, தற்போது தாயாக மாறுவதற்கான தன்னம்பிக்கை எனக்கு இல்லை. எனதுஉடல்நிலையை கருத்தில் கொண்டு நான் அதை சொல்லவில்லை. அதே சமயம் எனக்கு 'அற்புதமான பெற்றோர் மற்றும் அற்புதமான நண்பர்கள்' இருந்தாலும், எனக்கு ஒரு வாழ்க்கைத் துணை இருந்தால் விஷயங்கள் சிறப்பாக இருக்குமா என்று சில சமயங்களில் யோசிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய நேர்காணலில் தனது வாழ்க்கை துணை குறித்து பேசிய மனிஷா கொய்ராலா, "இப்போது குடும்பம் நடத்த சற்று தாமதமாகிறது, அதனால் சில சமயங்களில் எனக்கு ஒரு வாழ்க்கைத் துணை இருந்திருந்தால், வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமா? என்று யோசிக்கிறேன். ஆனால் இது பற்றி எனக்கே தெரியவில்லை. இப்போது என் வாழ்க்கை முழுமையடைந்துவிட்டதாக உணர்கிறேன், என் குழந்தைகள் என் நாய் மற்றும் என் பூனை, மோக்லி மற்றும் சிம்பா. மேலும், எனக்கு அற்புதமான பெற்றோர் மற்றும் அற்புதமான நண்பர்கள் வட்டம் உள்ளது. இருப்பினும், சில சமயங்களில் எனக்கு ஒரு வாழ்க்கை துணை இருந்தால் நன்றாக இருக்குமா? என்று தோன்றுகிறது.

அதே சமயம் தன்னம்பிக்கையைக் எனக்கு வந்தால் மட்டுமே ஒரு குழந்தையை தாயாக வளர்க்க விரும்புகிறேன். இந்த உலகில் குழந்தையை வளர்ப்பதற்கு எவ்வளவு பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஒரு தாயாக என்னால் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வரும் நாளில், நான் அதைச் செய்வேன். ஆனால் எனது உடல்நலப் பின்னணியை மனதில் வைத்து, நான் தொடர விரும்பும் பல நலன்கள் மற்றும் நான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் சுதந்திர உணர்வு... அனைத்தையும் தியாகம் செய்து பெற்றோராக இருப்பதில் கவனம் செலுத்த முடிந்தால், கண்டிப்பாக அதைச் செய்ய விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது 52 வயதாகும் மனிஷா கொய்ராலா காத்மாண்டுவில் உள்ள கொய்ராலா குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை பிரகாஷ் கொய்ராலா முன்னாள் அமைச்சர். அவரது தாத்தா, பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா, 1950களின் பிற்பகுதியில் இருந்து 1960களின் முற்பகுதி வரை நேபாளத்தின் பிரதமராக இருந்தார், அவருடைய இரு மாமாக்களான கிரிஜா பிரசாத் கொய்ராலா மற்றும் மாத்ரிகா பிரசாத் கொய்ராலா ஆகியேரும் நோபள அரசியலில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளனர்.

2012 இல் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டறிந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட மனிஷா கொய்ராலா, 5 ஆண்டுகளுக்குப் பிறகு டியர் மாயா (2017) என்ற படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார். அடுத்த ஆண்டு, அவர் நெட்ஃபிளிக்ஸின் லஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் ரன்பீர் கபூர் நடித்த சஞ்சு ஆகிய படங்களில் நடித்தார், இது 2018 இன் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment