நேஷ்னல் க்ரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
Advertisment
Advertisement
அதனைத் தொடர்ந்து அஞ்சானிபுத்ரா, சமக் ஆகிய கன்னட படங்களில் நடித்த அவர், கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தெலுங்கில் டியர் காம்ரேட், சரிலேரு நீக்கெவரு, புஷ்பா சீதாராமம் உள்ளிட்ட பல படங்கள் கன்னடத்தில் பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது இந்தியில் கால்பத்தித்துள்ள ராஷ்மிகா சமீபத்தில் வெளியான மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து 2021-ம் ஆண்டு தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த படம் ராஷ்மிகாவுக்கு நல்ல ரீச் கொடுத்ததை தொடர்ந்து கடந்த பொங்கல் தினத்தில் வெளியாள வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
குடும்ப கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட வாரிசு படத்தில் ராஷ்மிகாவுக்கு காட்சிகள் அதிகம் இல்லை
ஆனாலும் விஜய் தனக்கு பிடித்த நடிகர் அதனால் இந்த படத்தில் நடித்தேன் என்று கூறியிருந்தார்.தற்போது இந்தியில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/