Advertisment

இவர் தான் புஷ்பா புருஷனா? நடிகை ரேஷ்மா திருமண புகைப்படங்கள் : நெட்டிசன்கள் ஷாக்

சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா, சினிமா சின்னத்திரை என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி வருகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
reshma Pasupuleti

நடிகை ரேஷ்மா

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது நடிகர் நரேஷூடன் நடத்திய திருமண போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழில் விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து இவர் செய்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த ரேஷ்மா, விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா, சினிமா சின்னத்திரை என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் நரேஷூடன் தற்போது அவர் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் ரேஷ்மா, நடிகர் நரேஷூடன் திருமண கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது பெரும் வைரலாக பரவி வந்தாலும், நடிகர் நரேஷ் கடந்த ஓராண்டுக்கு முன்பே இந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது ரேஷ்மா இந்த புகைப்படங்களை வெளியிட்டு ப்ரமோஷன் தேடுகிறார் என்று கூறி வருகின்றனர்.

மேலும் இந்த புகைப்படங்களை புதிதாக பார்க்கும் பலரும் இவர்தான் புஷ்பா புருஷனா என கேட்டு வருகின்றனர். அதேபோல் உங்க ஜோடி பொருத்தம் சூப்பர் என்றும் நல்ல பிரைடல் போட்டோஷுட் இது என்றும் ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் இந்த போட்டோக்களுக்கு குவிந்து வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment