தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் இவர் நயன்தாரா விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா தற்போது யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தென்னிந்திய சினிமாவின் பிரபலமான காதல் தம்பதியாக வலம் வந்த இவர்கள, கடந்த ஆண்டு இறுதியில் தங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இருவரும் கூறியிருந்தனர்.
விவாகரத்துக்கு பின் சமந்தா தனது தோழியுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில், நாகசைதன்யா படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்தாலும், இவர்கள் தொடர்பான செய்திகள் மற்றும் வதந்திகள் நாள்தோறும் இணையத்தை சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது.
இதனிடையே நாகசைதன்யாக 2-வது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது நாக சைதன்யாக தெலுங்கு நடிகை ஷோபிதா என்பரை காதலித்து வருவதாகவும், அவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த வதந்திக்கு முழு காரணம் சமந்தாதான் என்றும், நாகசைதன்யாவின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அவர் இவ்வாறு செய்து வருவதாகவும் நாகசைதன்யாவின் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவு வைரலாக பரவியதை தொடர்ந்து இதற்கு தற்போது சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில். பெண் குறித்து வதந்திகள் வந்தால் அது உண்மை ஆண் குறித்து வதந்திகள் வந்தால், அதை ஒரு பெண்தான் பரப்புகிறாள் என்ன இதெல்லாம். சம்பந்தப்பட்ட நாங்களே இதை மறந்துவிட்டோம். நீங்களும் இதை மறந்துவிட்டு உங்கள் வேலையை பாருங்கள் உங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Rumours on girl – Must be true !!
— Samantha (@Samanthaprabhu2) June 21, 2022
Rumours on boy – Planted by girl !!
Grow up guys ..
Parties involved have clearly moved on .. you should move on too !! Concentrate on your work … on your families .. move on!! https://t.co/6dbj3S5TJ6
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், இது போன்ற வதந்திகளுக்கு நீங்கள் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“