scorecardresearch

திடீரென 10 கிலோ எடை குறைத்த ஷிவாங்கி… இப்படி குட்டி பாப்பாவா மாறிட்டாரே..!

Tamil Actress Shivangi Update : சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என இரண்டு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கிக்கு தற்போது பட வாய்ப்பு குவிந்து வருகிறது.

திடீரென 10 கிலோ எடை குறைத்த ஷிவாங்கி… இப்படி குட்டி பாப்பாவா மாறிட்டாரே..!

Tamil Actress Shivangi Viral Photo : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஷிவாங்கி. பாடல்கள் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய காமெடியிலும் தனி முத்திரை பதித்தார்.

இந்நிகழ்ச்சியில் புகழுடன் இவர் சேர்ந்து செய்யும் சேட்டைகள் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவும் அளவுக்கு சிரிப்பை வரவழைக்கும். குக் வித் கோளி முதல் 2- சீசன்கள் முடிந்து தற்போது 3-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் ஷிவாங்கி கோமாளியாக பங்கேற்று அட்ராசிட்டி செய்து வருகிறார்.  

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என இரண்டு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷிவாங்கிக்கு தற்போது பட வாய்ப்பு குவிந்து வருகிறது. இதில் குறிப்பாக தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் காசேதான் கடவுளடா உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய கேரக்டரில நடித்து வருகிறார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்று வரும் இவர், விஜய் டிவியின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஷிவாங்கி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், தனது உடல் எடையை 10 கிலோ குறைந்துள்ளதாக ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.

உடல் எடையை குறைத்து தான், ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தையும் ஷிவாங்கி வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress shivangi weight less photo going on viral update

Best of Express