scorecardresearch

நெஞ்சில் பளிச்சென அந்த டாட்டூ… ஸ்லீவ்லெஸ் பனியனில் சிம்ரன்; லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்

சிம்ரன் தற்போது சப்தம், அந்தகன், துருவநட்சத்திரம், மற்றும் வணங்காமுடி என பல படங்களில் நடித்து வருகிறார்.

Simran
நடிகை சிம்ரன்

90-களின் இறுதியில் தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கட்டிப்போட்டி சிம்ரன் இப்போதும் இளமை தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பிரபுதேவா அப்பாஸ் நடிப்பில் வெளியான விஐபி என்ற படத்தின் மூலம தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிம்ரன். அதனைத் தொடர்ந்து விஜயுடன் ஒன்ஸ்மோர், அஜித்துடன் அவள் வருவாளா, கமல்ஹாசனுடன் பம்மல் கே சம்மந்தம், ரஜினிகாந்துடன் பேட்ட, விஜயகாந்துடன் கண்ணுப்பட போகுதய்யா, ரமணா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் சோலோ நாயகியாக நடித்து அசத்தினார். தற்போது சப்தம், அந்தகன், துருவநட்சத்திரம், மற்றும் வணங்காமுடி என பல படங்களில் நடித்து வரும் சிம்ரனுக்கு சப்தம் 50-வது படமாகும். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு இந்தி மலையாளமத் கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் சிம்ரன் நடித்துள்ளார்.

தற்போது படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் சிம்ரன் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் லைக்ஸை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சிம்ரன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும், சிம்ரன் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறார் என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். ’90களின் குயின் சிம்ரன்’ ’வயது என்பது ஜஸ்ட் ஒரு நம்பர் என்பதை நிரூபித்துள்ளார்’ என்று பலரும் கூறி வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil actress simran letest photoshoot viral on social media