Advertisment
Presenting Partner
Desktop GIF

முதலில் தமிழ்... அப்புறம் தான் எல்லாம்... மகனுக்கு பாடம் நடத்தும் பிரபல நடிகை

Tamil Actress Update : தமிழ் தான் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழ் தான் எல்லமே...

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
முதலில் தமிழ்... அப்புறம் தான் எல்லாம்... மகனுக்கு பாடம் நடத்தும் பிரபல நடிகை

Actress Suja Varunee Teach Tamil Her Son : நடிகையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டு மருமகளுமான சுஜா வருணி தனது மகனுக்கு தமிழில் பாடம் சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தமில் 2002-ம் ஆண்டு வெளியான பிளஸ் 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுஜா வருணி. அதனைத் தொடர்ந்து கஸ்தூரி மான், உள்ளக் கடத்தல்,  நாளை, மிளகா, அடாவடி, எங்கள் ஆசான், இந்திரலோகத்தில் ந அழகப்பன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இவர், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும், நடிகர் திகலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான சிவாஜி தேவ் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தமிழில் சிங்கக்குட்டி, புதுமுகங்கள் தேவை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள சிவாஜி தேவ், ஏராளமான குறும்படங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு தற்போது அத்வைத் என்ற மகன் உள்ளார்.

தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு சத்ரு என்ற படத்தில் நடித்திருந்த சுஜா வருணி அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. 2 வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தில் முக்கி கேரக்டரில் நடித்திருந்தார். படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் சுஜா வருணி பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில், முதல் சீசன் போட்டியாளர் மற்றும், 2-வது சீசனில் கெஸ்ட், ஜீதமிழின் ஜீன்ஸ், சன்டிவியின் சித்தி 2. அன்பே வா, மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். நடிப்பு மட்டுமல்லாது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜா அவ்வப்போது வீடியே மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. பொதுவாக பிரபலங்கள் பலரும் தஙகளது குழந்தை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்று விரும்பி பெரிய பள்ளிகளில் சேர்த்து விடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதிலும் சில நடுத்தவர்க்க குடும்பத்தினரே தங்களது பிள்ளைகளை ஆங்கில வழி கல்வியில் சேர்த்துவிடுகினறனர்.

ஆனால் சுஜா வருணி கொஞ்சம் வித்தியாசமாக தனது மகனுக்கு முதலில் தமிழில் இருந்து படிக்க கற்றுக்கொடுக்கிறார். இந்த வீடியோவில் பேசும் அவர், தமிழ் தான் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழ் தான் எல்லமே... பள்ளிக்கு சென்றால் குழந்தைகள் ஆங்கில உள்ளிட்ட பல மொழிகளை கற்றுக்கொள்வார்கள்.ஆனால் நம்ம தாய் மொழியை எப்போதுமே விட்டுக்கொடுக்க கூடாது.

மேலும் இந்த புத்தகங்களை வைத்து என் குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கும்போது நானே மீண்டும் படிப்பது போன்ற உணர்வை தருகிறது என்று கூறியுள்ளார். வீடியோவின் இறுதியில், குழந்தைகளுக்கு எந்தமாதிரியான புத்தகங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suja Varunee Tamil Language
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment