Advertisment

'ஆமாங்க, நான் ஆபாச நடிகை தான்; ஆனா நீங்க...' ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சன்னி லியோன்

சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யான், வாராஹி யாத்திரையின்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sunny Leone Roja

நடிகை ரோஜா - சன்னி லியோன்

முன்னாள் ஆபாச நடிகையும் தற்போதைய பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையுமான சன்னி லியோன் குறித்து நடிகையும் ஆந்திராவின் அமைச்சருமான ரோஜா கூறிய சர்ச்சை கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படத்தியுள்ள நிலையில், இதற்கு நடிகை சன்னி லியோன் அளித்துள்ள பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், விஜயகாந்த், அர்ஜூன், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ரோஜா. தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள இவர், ஆந்திராவின் சட்டபையில் அமைச்சராக இருந்து வருகிறார். இதில் சமீப காலமாக நடிகை ரோஜா பிரபலங்கள் பற்றி கூறி வரும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யான், வாராஹி யாத்திரையின்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பவன் கல்யாணின் இந்த கருத்து சமுகவலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இதற்கு நடிகையும் அமைச்சருமான ரோஜா பதில் அளித்திருந்தார்.  

இந்த பதிலில், பவன் கல்யாண் வந்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு கற்றுக்கொடுக்கிறார். இது சன்னி லியோன் வேதம் ஓதியது போல் உள்ளது என்று கூறியிருந்தார். அரசியல் தொடர்பான விவாதத்தில் நடிகை சன்னி லியோன் குறித்து ரோஜா கூறிய கருத்து இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், அவர் ஆபாச நடிகையாக இருந்தவர் என்பதால் ரோஜா அவரை இழிவு படுத்தியுள்ளார் என்று சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள சன்னி லியோன், நான் ஆபாச நட்சத்திரம் தான். ஆனால் எனது கடந்த காலத்தை பற்றி நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை. உங்களை போல் நான் இல்லை. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியாக வெளிப்படையாக செய்வேன். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால் நீங்கள் இன்னும் அதை செய்யவில்லை என்று கூறியுள்ளார். சன்னி லியோனின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment