scorecardresearch

அரபிக்குத்து கிளப்பில் இணைந்த சீரியல் ஜோடி… தீயாக பரவும் பீஸ்ட் ஃபீவர்

Tamil Cinema Update : அரபிக்குத்து பாடலுக்கு நாயகி பூஜா ஹெக்டே, மற்றும் விஜய் டிவி ஸ்டார்ஸ் வெளியிட்ட வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது

அரபிக்குத்து கிளப்பில் இணைந்த சீரியல் ஜோடி… தீயாக பரவும் பீஸ்ட் ஃபீவர்

Beast movie Arabic Kuthu Song Celebrities Dance : சினிமா ரசிகர்கள் மத்தியில கடந்த இரு தினங்களாக வைரலாக ஒளித்துக்கொண்டிருக்கும் ஒரே வார்த்தை அரபிக்குத்து… காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான இந்த பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மாஸ்டர் படத்திற்கு படத்திற்கு பிறகு நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்தள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தள்ளார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சியில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வெளியிடுவதற்கு 2 நாட்கள முன்பாக இந்த பாடல் தொடர்பாக ப்ராமோ வெளியாகியது.

இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், பாடலை எழுதிய சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் அரபிக் ஷேக் வேடத்தில் வந்த இந்த ப்ரமோவே இந்த பாடல் தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று இணையதளத்தில் வைரலாக பரவியது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடலை பிரபலங்கள் பலரும், முனுமுனுத்து வரும் நிலையில், இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி அதை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகினறனர். இதில் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, மற்றும் விஜய் டிவி ஸ்டார்ஸ் வெளியிட்ட வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது சீரியல் பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகினறனர்.

சித்து – ஸ்ரேயா

திருமணம் சீரியல் மூலம் பிரபலமாக நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், சித்து ராஜா ராணி 2 சீரியலிலும், ஸ்ரேயா ரஜினி என்ற சீரியலிலும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

நமீதா மாரிமுத்து

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நமீதா மாரிமுத்து அந்த நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறினார். ஆனால் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், தற்போது அரபிக்குத்து பாடலுக்கு தனது ஸ்டைலில் நடனமாடி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

இவர்கள் மட்டுமல்லாது மேலும் ரசிகர்கள் பெரியர்கள் குழந்தைகள் என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வருகினறனர். தற்போது இந்த பாடல் பெரிய ஹிட் அடித்துள்ள நிலையில், பீ்ஸ்ட் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதில் அடுத்து படத்தின் டீசர் மற்றும் டிரெய்லருக்கு வெயிட்டிங் என்பது போல விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களை அதகளம் செய்து வருகின்றனர்  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil beast movie arabic kuthu song celebrities dance viral video