/indian-express-tamil/media/media_files/2025/10/18/praveen-gandhi-vjs-2025-10-18-12-28-56.jpg)
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதியே பாதியில் எலிமினேட் ஆகிவிடுவார் என்ற இயக்குனர் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.
விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் 9-வது சீசனில் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர், பலூன் அக்கா அரோரா, அகோரி கலையரசன் உள்ளிட்ட பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இதனிடையே பி்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இயக்குனரும் நடிகருமான பிரவீன் காந்தி, முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட நிலையில், நிகழ்ச்சி பற்றி சுவாரஸ்யமான கருத்துக்களை கூறியுள்ளார். இது குறித்து சினியுலகம் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவுடன், எனக்கு அங்கு யாரையுமே தெரியாது. அகத்தியன் சார் பொண்ணு கனி தெரியும். அவர் எனக்கு தங்கை போன்ற உணர்வை கொடுத்தவர். அதன்பிறகு, திவாக்கரை தெரியும். சமூகவலைதளங்களில் நல்லதை விட கெட்டது தான் அதிகமாக தெரியும். அதுபோலத்தான் திவாகர்.
அதன்பிறகு யாரையும் தெரியாது. முதல் நாளே சண்டை உருவானது. இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அப்சர்வ் பண்ண தொடங்கினேன். 5 நாட்கள் அப்சர்வ் பண்ணேன். அதன்பிறகு நானே வெளியில் வந்தவிட்டேன். என்னை தவிர வேறு யாரையாவது வெளியில் அனுப்பியிருந்தால், பிக்பாஸ் இவ்வளவு பெரிய பிரபலம் ஆகியிருக்காது. ஏனென்னால் நிகழ்ச்சியில் பங்கேற்றள்ள அனைவர் பற்றியும் விமர்சனங்கள் இருககிறது. நானும் அதை ஸ்போட்டீவாக எடுத்துக்கொண்டேன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதில், விஜய் சேதுபதிக்கும் கமல்ஹாசனுக்கும் நிறைய மாற்றங்கள் வித்தியாசங்கள் இருக்கிறது. அவர் பேசுவதற்கு நேரம் கொடுப்பார். தவறுகளை சுட்டிக்காட்டுவார். ஆனால் விஜய் சேதுபதி, இன்னும் பக்குவம் வரவில்லை. அவர் இந்த சீசன் பாதியிலேயே கிளம்பிவிடுவார். அதற்காக அவரை விரட்டிவிடுவார்கள் என்ற சொல்லவில்லை. கமல்ஹாசன் போனது போல் அவருக்கும் பிஸியாக இருக்க பல வேலைகள் வரலாம். அதனால் அவர் நிகழ்ச்சியை விட்டு போகும் நிலையும் வரலாம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து நிகழ்ச்சி ஸ்கிரிப்டா இல்லையா என்பது குறித்து பேசிய பிரவீன் காந்தி, உள்ளே அனைவரும் நடந்துகொள்ளும் விதம் உண்மையான ஒரிஜினல் தான். ஆனால் யார் உள்ளே இருக்கணும், யார் வெளியே போக வேண்டும் என்ற முடிவு செய்வது மக்கள் அல்ல, இவர்கள் தான். மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்ற சொல்லப்படுவது இருந்தாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யும் முடிவு தான் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வாரம் ஆதிரை அல்லது அப்சரா ஆகியோரில் யாராவது ஒருவர் எலிமினேட் ஆவார் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.