பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வனிதா மகள் ஜோவிகா மற்றும் நடிகை விசித்ரா இடையே படிப்பு தொடர்பான பரபரப்பான விவாரதம் நடைபெற்ற நிலையில், இதற்கு தீர்வு தரும் வகையில் கமல்ஹாசன் பேசினார். ஆனாலும் தற்போது இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி 7-வது சீசன் தொடங்கியது. 18 போட்டிகள் பங்கேற்ற இந்நிகச்சி முதல் நாளில் இருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா மற்றும் நடிகை விசித்ரா இடையே மோதல் ஏற்பட்டது.
ஜோவிகா தனக்கு 9-ம் வகுப்புக்கு மேல் படிப்பு வரவில்லை என்று சொல்ல அனைவரும் ஏன் அதற்கு மேல் படிக்கவில்லை என்று கேட்கின்றனர். இதில் விசித்ரா எந்த கஷ்டம் வந்தாலும் 12-ம் வகுப்பு வரை படித்துவிட வேண்டும் என்று சொன்னார். அதன்பிறகு நான் ஜோவிகாவை குறிப்பிட்டு சொல்லவில்லை என்று சொல்ல, எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் வரவில்லை என்று கூறினார்.
அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட ஒரு கட்டத்தில் விசித்ரா ஜோவிகாவிடம் தமிழில் எழுதி காமி என்று கேட்க மோதல் உச்சக்கட்டமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசிய தொகுப்பாளர் கமல்ஹாசன், நானும் படிக்காதவன் தான் என்று சொல்லி ஜோவிகாவுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசி, உடனே விசித்ரா சொன்னதும் தப்பிலில்லை. இது ஒரு ஜெனரேஷன் கேப் என்று கூறியிருந்தார்.
இதனால் இந்த படிப்பு தொடர்பான சர்ச்சை முடிந்துவிட்ட நிலையில், அடுத்து சர்ச்சையை தொடங்கியுள்ளார் விசித்ரா. இனி ஜோவிகா தன்னை மேடம் என்று தான் அழைக்க வேண்டும். விச்சு என்று அழைக்கும் தகுதி அவருக்கு இல்லை என்று சொல்ல, இதை ஏன் அவ்வளர் கோபமாக சொல்றீங்க என்று ஜோவிகா கேட்க, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள, இனி வரும் நாட்களில் இவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“