/indian-express-tamil/media/media_files/2025/10/15/praveen-gandi-2025-10-15-14-13-47.jpg)
பிக்பாஸ் நிகழச்சயின் போட்டியாளராக பங்கேற்றிருந்த நடிகரும் இயக்குனரமான பிரவீன் காந்தி, ஒரு வாரத்தில் வெளியேற்றப்படட நிலையில், நான் உள்ளே செல்லும்போது என்ன எழுதப்பட்டதோ அதன்படி தான் நடந்துள்ளது என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. கடந்த 8 சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனுக்கு சமூகவலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் அதிகமாக இருந்து வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கூறி, த.வா.க கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியிருந்தார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் என்ன நடக்கிறது என்பது குறித்து யூடியூப் சேனல்களில் வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இயக்குனரும் நடிகருமான பிரவீன் காந்தி, தான் வெளியேறியது குறித்தும், நிகழ்ச்சியில்ஒரு வாரத்தில் தான் என்ன கற்றுக்கொண்டேன் என்பது குறித்தும் பேசியுள்ளார். பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த எனக்கு ஸ்பேஸ் என்பது என் இதயத்தில் தான் இருக்கிறது. நான் வெளியில் வந்தவுடன், என்னை பற்றி மற்றவர்கள் என்ன பேச வேண்டுமு் என்று முடிவு செய்துவிட்டேன்.
அதன் காரணமாகத்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியில் வரும்போது, கட்டிப்பிடிப்ப வந்தவர்களை வேண்டாம் என்று தடுத்து நிறுத்திவிட்டேன். அவர்கள் நான் தோற்றுவிட்டேன் என்பதை சொல்லும் வகையில் சிம்பத்தியை உருவாக்க வந்தார்கள். ஆனால் அது எனக்கு தேவையில்லை. என்னை பற்றி பாசிட்டீவாகத்தான் பேச வேண்டும் அதனால் தான் அவர்களை அப்படியே இருங்கள் வேண்டாம் என்று சொன்னேன். அதேபோல் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தில் நாமினேஷன் வைக்கிறார்கள். இதில் எந்த முடிவும் எடுக்க முடியாது.
ஒரு வாரம் வேற டாஸ்க் கொடுத்து அதில் இருந்து ஃபில்டர் பண்ணுங்க என்று சொன்னேன். நான் வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன் என்று பலர் நினைக்கலாம். ஆனால் என்ன எழுதப்பட்டதோ அதுதான் நடந்தது. நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும், ஒரு வாரத்தில் வெளியில் போக வேண்டும் என்பதும், போகும்போது விஜய் சேதுபதியிடம் நான் ஸ்பேஸ் என்று சொன்னது என அனைத்துமே எழுதப்பட்டது. எல்லாம் எழுதப்பட்டது நடக்கிறது. நம்புவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். என்னை பற்றி இப்போது பேசி வருபவர்கள் பேசுவார்கள். இது நிரந்தரம் அல்ல. அடுத்து நான் ஒரு பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தால் இது மறந்துவிடும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் கூத்தாடிகள் இருக்கும் இடம், பொழுதுபோக்கு அதிகம் உள்ள நிகழ்ச்சி, இதில் பாதி ஸ்கிரிப்ட் பா. அன்று கூட விஜய் சேதுபதி இது ஸ்கிரிப்ட் இல்லை என்று சொன்னார். நான் உள்ளே போன பிறகுதான் அதை நம்புனேன். அனைத்துமே உண்மைதான் மக்கள் பார்க்க வேண்டும் என்பதால் செய்கிறார்கள். மக்களுக்கு பெரிய சுவாரஸ்யம் கொடுக்க வேண்டும் என்று நான் போனேன். ஆனால் யாரும் ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.