பிரவீனுக்கு விழுந்த பளார், கமருதீன் ஆக்ஷன்; கதறி அழுத சாண்ட்ரா: பிக்பாஸ் வீட்டில் நடந்த அடிதடி மோதல்

இதுவரை எந்த சீசனிலும் நடக்காத அடிதடி மோதல் இந்த சீசனில் நடந்துள்ளது. இந்த மோதலில் பிரவீனை கமருதீன் அடித்த நிலையில், சாண்ட்ரா கதறி அழுதுள்ளார்.

இதுவரை எந்த சீசனிலும் நடக்காத அடிதடி மோதல் இந்த சீசனில் நடந்துள்ளது. இந்த மோதலில் பிரவீனை கமருதீன் அடித்த நிலையில், சாண்ட்ரா கதறி அழுதுள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
Bigg boss Kam

பிக்பாஸ் வீட்டில் நடந்த அடிதடி மோதலில் கமருதீன் பிரவீனை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாண்ட்ரா இதை பார்த்து கதறி அழ, திவ்யா உள்ளிட்ட அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். சபரிநாதன் – அமீத் இடையே இதனால் மோதல் எழுந்துள்ளது.

Advertisment

பிகபாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும், ரசிகர்கள் நாள்தோறும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவும், கடுமையாக விமர்சனம் செய்யவும் பிக்பாஸ் நிகழச்சியை பார்த்து வருகினறனர். முதலில் திவாகர், அகோரி கலையரசன், பிரவீன் காந்தி, சபரிநாதன். கனி உள்ளிட்ட பல 20 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில். இதில் சிலர் வெளியேற்றப்பட்டனர். 

தொடர்ந்து வைல்ட் கார்டு என்டரியாக நடிகர் பிரஜின், அமித், திவ்யா, சாண்ட்ரா உள்ளிட்ட 4 பேர் 28-வது நாளில் உள்ளே நுழைந்துள்ளனர். இவர்கள் வந்த பிறகு, பிக்பாஸ் வீடடில் மாற்றம் இருக்கிறதா? அல்லது பழைய நிலையின் தான் உள்ளதா என்பது குறித்த கேள்விகள் அதிகமாகி வரும நிலையில், இதுவரை எந்த சீசனிலும் நடக்காத அடிதடி மோதல் இந்த சீசனில் நடந்துள்ளது. இந்த மோதலில் பிரவீனை கமருதீன் அடித்த நிலையில், சாண்ட்ரா கதறி அழுதுள்ளார். 

இது குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், பிரஜின்க்கு சப்போர்ட் செய்ய போக, கமருதீன் – பிரவீன் இடையே மோதல் எழுந்தது அதன்பிறகு கமருதீன் கிச்சனில் இருக்க. அங்கே வரும பிரவீன். இனிமேல் இப்படி நடந்தால் நன்றாக இருக்காது சொல்லிட்டேன் என்று சொல்ல, கடுப்பான கமருதீன். வெளியில் வந்து பிரவீனிடம சண்டைக்கு போக மோதல் முற்றி இருவரும் அடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். போட்டியாளர்கள் அனைவரும் இருவரையும் தடுத்துள்ளனர்.

Advertisment
Advertisements

அதே சமயம், கமருதீன் அடிக்க, பிரவீன்க்கு கன்னத்தில் அடி விழுந்துவிட்டது. இதனால் பிரஜின் கமருதீனை அடிக்க போக, இந்த சண்டையை பார்த்துக்கொண்டு இருந்த சாண்ட்ரா வீட்டுக்குள் கதறி அழுகிறார். சக போட்டியாளர்கள் அவருக்க ஆறுதல் சொல்ல, கமருதீன் – பிரவீன் இருவரும் தனித்தனியாக சென்றுவிடுகின்றனர். கமருதீனிடம் நடிகை திவ்யா அவரை அடிக்கும உரிமையை யார் கொடுத்தா என்று கேட்டு அவருக்கு அட்வைஸ் கொடுக்கிறார். இதன்பிறகு, கன்ஷப்ஷன் ரூமுக்கு சென்ற பிரவீன் இது எல்லாமே ப்ளராங்க் என்று போட்டு உடைக்கிறார்.

அதன்பிறகு, இந்த சண்டை உண்மை என்ற நம்பிக சக போட்டியாளர்கள் தங்களுக்குள் வாய் சண்டை போட்டுக்கொள்ள, பிரவீன், கமருதீன், பிரஜின் ஆகிய மூவரும கன்ஷப்ஷன் ரூமில் இருந்து இதை பார்த்து ரசிதது வருகின்றனர். அதன்பிறகு இப்படி ஒரு நாடகத்தை நடத்தியதற்காக மூவரும் பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

biggboss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: