/indian-express-tamil/media/media_files/2025/10/08/diwakar-and-vj-paru-kalai-2025-10-08-21-22-22.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தொடங்கிய நாள் முதலே பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக களமிறங்கியுள்ள வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், கூட்டுக்குடும்பம் மற்றும் உருண்டை பிடித்து சோறு சாப்பிடுவது குறித்து பேசியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் வி.ஜே.பார்வதியிடம் பேசிய அவர், சாப்பிடும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குழம்பு ஊற்றுவார்கள். இப்படி இருக்கும்போது தட்டில் சாப்பாடு போட்டு உருண்டை பிடித்து சாப்பிடுவது இதெல்லாம் எந்த காலம்? இப்போ கூட்டுக்குடும்பம் எங்கே உள்ளது? 3 சகோதரர்கள் இருந்தால் திருமணம் ஆனவுடன் அவரவர் தனித்தனியாக சென்றுவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது உருண்டை பிடித்து அள்ளி சாப்பிடுவது எல்லாம் எந்த காலம்?
ஒரு வீட்டில் இரண்டுபேர் இருந்தால் எந்நேரமும் ஒருவரை ஒருர் ஊட்டிக்கொண்டு இருக்கமாட்டார்கள். உங்களுக்கு வேண்டும் என்றால் போட்டு சாப்பிடுங்க என்று தான் சொல்வார்கள். தட்டில்போட்டு தண்ணீர் ஊற்றி சாப்பிடுகிறார்கள். ஆனால் அதை பிசைந்து கஞ்சியுடன் ஊட்டப்போறாங்க என்று திவாகர் சொல்ல, அடுத்து பேசும் பார்வதி, டாய்லைட் க்ளீன் செய்யும்போது சுத்தப்பத்தமாகத்தான் உள்ளே வரணும் என்று சொன்னானே, அவனே பல இடத்தில் கையை வைத்துவிட்டு சாப்பாடு கஞ்சியில் கையை விட்டு அலசுகிறான் என்று சொல்கிறார்.
இதை கேட்ட திவாகர், சிலநேரம் மூக்கை நோண்டுவது, அதே கையை அப்படியே சாப்பாட்டில் வைப்பது, எல்லாம் நடக்குது , அட்ஜெஸ்ட் பண்ணிட்டு தான் இருக்ணும். இந்த கொடுமை எல்லாம் பத்தாது, இதை பார்த்த நந்தினி எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். உருண்டை உருட்டுவதே அட்டன்ஷன் கிரியேட் செய்வதற்காக தான் செய்கிறார்கள். அதன்பிறகு இடது கையால் எடுத்து போடுகிறார்கள். இப்படி செய்தால் எப்பா சாப்பிட முடியும். நீ இடது கையால் போட்ட எனக்கு வேண்டாம் என்று சொல்லவும் முடியாது. அப்படியே சாப்பிட்டு வந்தேன்.
Midnight funny gossip session😁 #VJParvathy#diwakar#Kalaiyarasan#BiggBossTamil9#BiggBossTamilpic.twitter.com/LzFIkhMRvo
— Sekar (@Sekar_offl) October 7, 2025
என்னை ஒரு சேனல்க்காரன் ப்ராங்க பண்றேன் என்று சொல்லிவிட்டு வந்தான் என்று திவாகர் சொல்ல, உன்னை பற்றி பேசாதே என்று பார்வதி சொல்லிவிட்டார். அதன்பிறகு சமைக்கிறர்கள் ரொம்ப சுத்தமாக கழுவுவது கிடையாது. சாக்ஸை போட்டு நோண்டிவிட்டு, டக்குனு சாப்பாட்டில் கை வைத்துவிடுகிறார். இதில் என்னை கொடுமை என்றால் எந்த கை என்று தெரியாமல் சாப்பாட்டை பிசைந்து, அதை ஊட்டிவேறு விடுகிறார்கள். பிசைந்து தருவதாக சொல்லவும், கனி அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று திவாகர் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.