Advertisment

காவாலா பாட்டுக்கு வந்த சோதனையா இது? பிக்பாஸ் ஜனனியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணனுடன் பேச தொடங்கியதும் இவர் சரியாக விளையாடவில்லை என்று கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டார்.

author-image
WebDesk
New Update
Biggboss Janani

பிக்பாஸ் ஜனனி

ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அநத வகையில் பிக்பாஸ் ஜனனி காவாலா பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவுக்கு பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisment

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான 2 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் தமன்னா நடனத்தில் வெளியான காவாலா பாடல் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் ஜனனி காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளரான ஜனனி, லாஸ்லியாவுக்கு இணையாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணனுடன் பேச தொடங்கியதும் இவர் சரியாக விளையாடவில்லை என்று கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனாலும் பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த ஜனனிக்கு விஜயின் லியோ படத்தில் வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து அவருக்கு தற்போது நடிக்க வாய்ப்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் நடிகை ஜனனி காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஜனனியின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் சூப்பர் என்று காமெண்ட் செய்துள்ள நிலையில், நெட்டிசன்கள், என்னடா இது காவாலா பாட்டுக்கு வந்த சோதனை என்றும், பள்ளி ஆண்டு விழாவில் ஸ்டெப்ஸ் தெரியாமல் பச்சைக் குழந்தைகள் டான்ஸ் ஆடுவது போன்ற ஒரு ஆட்டத்தை போட்டு காவாலா பாட்டையும் தமன்னா டான்ஸையுமே கலாய்க்கிறார் ஜனனி என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment