/indian-express-tamil/media/media_files/2025/10/17/praveen-ghandi-ratchchan-2025-10-17-22-13-36.jpg)
யூடியூப் சேனல்களின் நேர்காணல்கள், மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் இயக்குனர் மற்றும் நடிகர் பிரவீன் காந்தி எத்தனை படம் இயக்கியுள்ளார் தெரியுமா?
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. சமூகவலைதளங்களில் பிரபலமான பலர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், ஒரு வகையில் சுவாரஸ்யமாக சென்றகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த இயக்குனர் பிரவீன் காந்தி, முதல் வாரத்திலேயே வெளியேறினார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்று கூறி வருகின்றனர்.
ரட்சகன்
மேலும் 1997-ல் வெளியான ரட்சகன் படத்தை இவர் தான் இயக்கினாரா என்ற கேள்வியும் இணையத்தில் அதிகம் கேட்கப்பட்டு வருகிறது. நடிகராக வேண்டும் என்று சினிமாவுக்கு வந்த பிரவீன் காந்தி, நடிகராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், இயக்குனர் பிரியதர்ஷனிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரின் திறமையை பார்த்த தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், இவருக்கு பட வாயப்பு கொடுக்க அப்போது ஒருவான படம் தான் ரட்சகன். நாகர்ஜூனா நாயகனாக நடித்த இந்த படத்தில் அப்போது மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென் நாயகியாக நடித்தார்.
காதல், அதிரடி, ஆக்ஷன் என கமர்ஷியல் அம்சம கொண்ட இந்த படத்தில் ரகுவரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தனது மகளின் காதலை, தனது கம்பெனியின் நலனுக்காக அப்பா எப்படி பயன்படுத்துகிறார் என்பதை அடிப்படையாக வைத்து திரைப்பதை அமைக்கப்பட்ட இந்த படம், நாகர்ஜுனாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. படத்தில் அவர் ஏற்று நடித்த அஜய் கேரக்டர், இன்றும ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருப்பது, சமீபத்தில் வெளியான கூலி படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜோடி
ரட்சகன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்த பிரவீன் காந்தி இயக்கத்தில் அடுத்து வெளியான படம் ஜோடி. பிரஷாந்த் சிம்ரன் இணைந்து நடித்த இந்த படத்தில் த்ரிஷா ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் விஜயகுமார், ரமேஷ் அரவிந்த், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படமும் பிரவீன் காந்திக்கு வெற்றிப்படமாக அமைந்தது, இந்த படத்தில் அவரு ஒரு கெஸ்ட் ரோலிலும் நடித்திருப்பார். காதலர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தின் சம்மதத்திற்காக தங்கள் வீடுகளை சம்மதிக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை.
ஸ்டார்
ஜோடி படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரவீன் காந்தி அஜித் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் நடிக்கவில்லை. அதன்பிறகு மீண்டும் பிரஷாந்த் நடிப்பில், 2001-ம் ஆண்டுஸ்டார் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் சிம்ரன் நாயகியாக நடிக்க இருந்ததாகவும், ஆனால் அவர் விலகியதால் அந்த கேரக்டரில் ஜோதிகா நடித்தார் என்றும் கூறப்படுகிறது. தனது மகனை கொலை செய்தவனின் மகனை கொலை செய்ய துடிக்கும் ஒரு வில்லன், அவனிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற வேறொருவரை தனது மகனாக நடிக்க அழைத்து வரும் தொழில் அதிபர், இடையேயான மோதல் கடைசியில் என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல், இந்த படத்தில் வில்லனாக நடித்த ரகுவரன் கொல்ல நினைக்கும் விஜயகுமாரின் மகனாக பிரவீன் காந்தியே நடித்திருந்தார். ஆனால் அவரது நடிப்ப விமர்சனரீதியாக வரவேற்பை பெறவில்லை. இந்த படமும் எதிர்பாாத்த வெற்றியை பெறவிலலை.
துள்ளல்
ஸ்டார் படத்திற்கு பிறகு 6 வருட இடைவெளியில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் தான் துள்ளல். பிரவீன் காந்தி நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் நடிகர் விவேக் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு 2014-ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவன் வேலப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாறு புலிப்பார்வை என்ற படத்தை இயக்கினார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வெளியில் வந்துள்ள பிரவீன்காந்தி அடுத்து ரட்சகன் 2 படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்காக நாகர்ஜூனாவிடம் கதை சொல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.