/indian-express-tamil/media/media_files/2025/10/09/biggboss-diwakar-2025-10-09-17-04-19.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன், ஆரம்பம் முதலே அமர்க்களமாக இருந்து வரும் நிலையில், இந்த நிகழச்சியில் போட்டியாளராக வந்துள்ள வாட்டர் மிலன் ஸ்டார் திவாகருடன் போட்டியாளர்கள் பலரும் மோதலில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து வருகிறது.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. இதற்கு முன்பு நடந்த சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில், பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, யூடியூப்பர்கள் குறித்தும், சினிமா நடிகர்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்த வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட டெய்லர் அக்கா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
இதன் மூலம் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்ப்புகள் இரந்தாலும் ஒரு பக்கம் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இதனிடையே, யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி வருபவர்கள் குறித்து தரக்குறைவாக சிறுமைப்படுத்தும் வகையில், திவாகர் பேசியுள்ளதாக சக பிக்பாஸ் போட்டியாளர் விக்கல்ஸ் விக்ரம் கருத்து கருத்து தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு சக போட்டியாளர்கள் இவர்களுக:கு இடையெ சமாதானத்தை ஏற்படுத்தினர்.
இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், பிக்பாஸ் வீட்டை கூட்டுவதற்காக பஞ்சாயத்து நடந்துள்ளது, இதில், தூய்மை பணியாளராக இருக்கும் திவாகரிடம், டெய்லர் அக்கா க்ளீன் பண்ணுங்க, உங்க வேலையை நீங்க பண்ணுங்க என்று சொல்ல, ரெண்டுபேரும் வேலையை பகிர்ந்து செய்ய வேண்டும் என்று திவாகர் சொல்ல, உங்களுக்கு கொடுத்த வேலையை நீங்க செய்யுங்கள் என்று டெய்லர் அக்கா சொல்கிறார். ஷேரிங் எல்லாம் இல்லை உங்களுக்கு தனியாக வேலை வைத்தாலும் செய்ய வேண்டும். இல்லை என்றால், பிக்பாஸிடம் கம்ளைண்ட் பண்ணுங்க என்று சொல்கிறார்.
Hero aaganum nu try panrigala #Kamurudin 😏
— 𝙉𝙖𝙖𝙣⚡ 𝙍𝙖𝙣𝙟𝙞𝙩𝙝🐦🔥 (@Itz_Ranjith_X) October 8, 2025
Adhu en thane thalaivan #Diwakar erukura vara nadakathu#MakkalinStar#BiggBossTamil#BiggBossSeasonTamil9pic.twitter.com/HUVFERB7eV
அப்போது கம்ருதின், நீ கத்தினால் நான் 10 மடங்கு கத்துவேன். கை நீட்டி பேசாதே, மூஞ்சிக்கு மேல கை நீட்ட கூடாது, ஆனா நான் நீட்டுவேன் என்று சொல்ல, இப்படி பேசுவது அநாகரீகம் என்று திவாகர் சொல்கிறார். அப்போது டெய்லர் அக்கா உங்க ரெண்டுபேருங்கும் உள்ள பழைய சண்டையை இதில் காட்டாதீங்க, என்று சொல்ல, அதன்பிறகு சக போட்டியாளர்கள், இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us