லாக்டவுனில் கர்ப்பம், ஒரே நாளில் முறைப்படி திருமணம், வளைகாப்பு, வரவேற்பு: பிக்பாஸ் கலையரசன் கல்யாண கலாட்டா!

தாலியுடன் வந்தால் அவன் நல்லவன் இல்லை என்றால், உன்னை பயன்படுத்த பார்க்கிறான் என்று அவரது தோழி சொல்லிவிட்டார்.

தாலியுடன் வந்தால் அவன் நல்லவன் இல்லை என்றால், உன்னை பயன்படுத்த பார்க்கிறான் என்று அவரது தோழி சொல்லிவிட்டார்.

author-image
D. Elayaraja
New Update
Kalai Praga

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கலையரசன், அதற்கு முன்பே சமூகவலைதளங்களின் மூலம் பிரபலமான நபராக இருக்கும் நிலையில், அவரது திருமண வாழ்க்கை குறித்து மனைவியுடன், கொடுத்த நேர்காணல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அகோரி கலையரசன் என்றால் இணையதளம் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த முகம் தான். டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான இவர், அதன்பிறகு, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்களில் வீடியோ வெளியிட்டு பிரபலமாகியுள்ளார். மேலும் பல கரகம் வைத்து ஆடும் ஆட்டத்தை பிரபலபடுத்தும் முயற்சியில் இருக்கும் கலையரசன் இடையில் அகோரியாக மாறி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். மேலும் அவரது மனைவியும் அவரை பற்றி குற்றச்சாட்டுகள் கூறினார்.

இதனிடையே இவர்கள் இருவரும், கலாட்டா சேனலில் நேர்காணல் கொடுத்த பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய கலையரசன், நான் டிக்டாக்கில் வீடியோ போடும்போது, யார்ரா இவன் என்று நினைத்தார், ஆனால் அதன்பிறகு, தெளிவான ஒரு வீடியோ போட்டபோது எனக்கு மெசேஜ் பண்ணினார். அதன்பிறகு நாங்கள் இணையதளம் மூலமாக பேச தொடங்கினோம். அதன்பிறகு ஒரு ஈவெண்ட்டுக்காக நான் சென்னை வந்திருந்தேன்.

வருவதற்கு முன் இவருக்கு தகவல் கொடுத்திருந்தேன, அப்போது நாங்கள் சந்திப்பது பற்றி முடிவு செய்தபோது, என்னை திருமணம செய்துகொள்ள முடியுமா என்று கேட்க, அப்படி என்றால் நாளை நாம் சந்திக்கும்போது தாலி வாங்கிக்கொண்டு வா என்று சொன்னார். மேலும் தாலியுடன் வந்தால் அவன் நல்லவன் இல்லை என்றால், உன்னை பயன்படுத்த பார்க்கிறான் என்று அவரது தோழி சொல்லிவிட்டார். நானும் தாலி வாங்காமல் போய்விட்டேன், அவர் என்னை விட்டு விலகுவது போல் பேச, நான் உடனடியாக இதை தெரிந்துகொண்டு தாலி வாங்கி வந்தேன்.

Advertisment
Advertisements

ஒரு பார்க்கில், வைத்து பூ கொடுத்து இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, எங்க அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, அந்த பார்க்கிலே தாலி கட்டிவிட்டேன். அதன்பிறகு நான் ஊருக்கு வந்துவிட்டேன் என்று கலையரசன் கூறியுள்ளார். அதற்கு அவரது மனைவி, இருவருக்கும் ஒரே வயது தான். 19 வயதில் நான், இப்படியே இருந்தால் என்ன பண்றது, நம்மல யார் கல்யாணம் பண்ணிக்கொள்வார் என்று நினைக்கும்போது இவர், கேட்டதால், விளையாட்டுக்கு தாலி வாங்கிக்கொண்டு வா என்று சொன்னேன்.

இப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது, அன்னைக்கு திருமணம் ஆனதே எனக்கும் என் தோழிக்கும் அதிர்ச்சி தான். அதன்பிறகு இருவரும் பிரிந்து சென்றுவிட்டோம். என் வீட்டில் ஒப்புக்கொள்ளாமல் இருந்தனர். அதன்பிறகு கலை பற்றி தெரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்கள். 3 மாதத்திற்கு பிறகு, நான் கோவை சென்றுவிட்டேன் லாக்டவுன் போட்டதால் அங்கேயே தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, வீட்டில் சொல்லி திருமணம் நடக்கும் என்று நினைத்து நாங்கள், ஒன்றாக இருந்தோம். இதனால் நான் கர்ப்பம் ஆனேன்.

லாக்டவுடன் நேரத்தில் எங்களது திருமணம், வளைகாப்பு, திருமண வரவேற்பு மூன்றும் ஒரே நாளில் நடந்தது. எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும், நான் இவரை அடித்து வெளியில் தள்ளி கதவை சாத்தி இருக்கிறேன். ஆனால் அடுத்த சில நிமிடங்களில், சமாதானம் ஆகிவிடும். இவர் அழுதுவிடுவார் பார்க்க பாவமாக இருக்கும் அதனால் திரும்பவும் பேசிக்கொண்டேன் என்று கலையரசன் மனைவி கூறியள்ளார். 

Tamil Bigboss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: