சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நெட்டிசன்களுக்கு கண்ட்ன்ட் கொடுப்பதில் பிக்பாஸ்க்கு நிகர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரிய வரவேற்பாக உள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் காலம் ட்ரோலர்கள் மீம் கிரியேட்டர்கள் மற்றும் நெடடிசன்களுக்கு பொற்காலம் என்றே சொல்லாம்.
இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக முதல் நாளில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.
முதல் நாளில் ஜி.பி.முத்து அலப்பறைகள், ஜனனி டார்கெட் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், வலைதளங்களில் பிரபலமான ஜி.பி.முத்துக்கு அவர் உள்ளே செல்வதற்கு முன்பே ஆர்மி தொடங்கிவிட்ட நிலையில், புதுமுகமான ஜனனிக்கு முதல்நாளில் ஆர்மி தொடங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதேபோல் சத்யா சீரயலில் ரவுடி பேபியாக கம்பீரமாக கலக்கிக்கொண்டிருந்த நடிகை ஆயிஷாவை வந்த முதல்நாளே அழவச்சிட்டாங்களே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணும் அளவுக்கு சற்று சோக சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. மற்ற சீசனிகளில் இல்லாம் போக போகத்தான் சண்டை சச்சரவுகள் தொடங்கியது. ஆனால் சீசன் 6 தொடங்கும்போதே சண்டையா அடுத்து என்னலாம் நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் கடந்து செல்கிறது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது நாளான இன்று முதல் ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே அசால் கோலாருடன் பேஸ் டூ பேஸ் கம்யூனிகேசனில் நோஸ்கட் ஆகி முதல் நாளே அழுத நடிகை ரவுடி பேபி ஆயிஷாவை நாமினேட் செய்வதாக நம்ம ஜனனி சொல்லிட்டாங்க. அதுக்கு காரணம் இவங்க கூட எனக்கு சண்டை வரலானு யோசிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
அதற்கு ரவுடி பேபி நான் உங்கள அப்படி நினைக்கல என்று சொல்ல, அதற்கு நான் இப்படி சொல்றது உங்களுக்கு பிடிக்கலையா என்று கேட்கிறார். அதற்கு ரவுடிபேபி, தயவு செய்து உங்கள் எல்லோரிடமும் என்னோட டாக்கிங் ஸ்டைல் தப்பாக இருக்குனு நா ஃபீல் பண்ணி சொல்றேன்க என்று சொல்கிறார்.
அதற்கு மற்றொரு போட்டியாளர் எங்களுக்கு அது தப்பா தெரியல என்று சொல்ல மற்றவர்களும் அதே மாதிரி சொல்ல ஐம் சாரி நான் தெரியாம சொல்லிட்டேன் என்ன விட்ருங்க என்று ஆயிஷா சரண்டர் ஆகிவிடுகிறார். அதே சமயம் அழவும் தொடங்கிவிடுகிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் ஆயிஷாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil