விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது ஆறடி உயரம், நீண்ட தலைமுடி என அனைவர் மத்தியிலும் பெரும் பிரபலமான போட்டியாளர் நிரூப் தற்போது அந்நியன் அம்பியாக மாறியுள்ள கெட்டப் வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பாப்பை ஏற்படுத்தி வரும் இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடி வருகினறனர். இந்நிலையில், உயரம் மற்றும் நீண்ட தலைமுடிக்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான நிரூப் தற்போது அந்நியன் அம்பியான மாறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இந்த வாரம் நிலம் ஆற்றலை கொண்டு பெட்ரூம் ஏரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிரூப் சினிமா டாஸ்க்குக்காக மீசையை எடுத்து அந்நியன் அம்பியாக கெட்டப் போட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆறடி உயரத்தில் அண்டர் டேக்கர்க்கு அண்ணனாக இருந்த நிரூப் இப்போது அந்நியன் அம்பிக்கு தம்பியாக மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் கூறி வருகினறனர். மேலும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் படத்தில் கால் த்ரோகா மற்றும் ஆக்வாமேன் படத்தின் ஜேசன் மோமோ போல இருக்கிறார் எனறு கூறி வந்த ரசிகர்கள் தற்போது பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நிலம் காயினை வைத்து பெட்ரூம் ஏரியாவை ஆட்சி செய்து வரும் நிரூப், தனது கட்டனைகளை மற்றவர்களுக்கு அக்ஷராவை தனது அசிஸ்டெண்டாக வைத்துள்ளார். மேலும் அனைவரையும் சர்வாதிகாரம் செய்ய பிக்பாஸ் சிறப்பு அனுமதி அளித்துள்ள நிலையில், சினிமா டாஸ்க்கில் நிரூப்புக்கு மட்டும் அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் வாய்ப்பினை கொடுத்துள்ளார்.
இதற்கான அம்பியாக மாறும் முயற்சியில் தனது மீசையை மழித்த நிரூப், அம்பியின் கும்குமம், தலைமுடி ஸ்டைல் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றி அசல் அந்நியன் பட அம்பியாகவே மாறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள அண்டர்டேக்கரை இப்படி அம்பியான மாற்றிவிட்டீர்களே என்று கருத்தக்களை பதிவிட்டு வருகின்றனர். என்னடா ஆக்வாமேனை அம்பியாக மாத்திட்டீங்க என கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் சிங்கமாக இருந்த நிரூப்பை இப்படி சிதை்துவிட்டீர்களே என்று ரசிகர்கள் புலம்பி வருகி்ன்றனர்..
இசைவாணி சர்வாதிகாரம் செய்வதாக போட்டியாளர்கள் அனைவரும் கூறி வந்த நிலையில், தற்போது நிரூப், போட்டியாளர்கள் அனைவரையும் பச்சை மிளகாய் பாகற்காய் சாப்பிடசொல்லி தனது ஆதிக்கத்தை செலுத்தும் நிரூப் அம்பியா? அந்நியனா என்பது பிக்பாஸ் தரும் அனுமதியை வைத்தே தெரியவரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil