விஜயடிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வழக்கமான போட்டியாளர்களை விட முற்றிலும் புதுமுகங்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், இமான் அண்ணாச்சி, ராஜூ, பிரியங்கா, வருண் உள்ளிட்ட சிலர் மட்டுமே பிரபலமான முகங்களாக உள்ளனர்.
Advertisment
இதில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில், அடுத்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரமோவில் இந்த வீட்டில சொன்னாலும் தப்பு சொல்ல நினைத்தாலும் தப்பு சொல்லாம இருந்தாலும் தப்பு என்று பிரியங்கா பேசும் காட்சி வைரலாகி வருகிறது.
மேலும் பிரியங்கா ராஜூவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொல்லும் ஒவ்வொரு வரிகளுக்கும், இமான் அண்ணாச்சியின் சைககள் காட்டப்படுகிறது. இதை வைத்து இமான் அண்ணாச்சி செய்தததைத்தான் பிரியங்கா சுட்டிக்காட்டுகிறாரா என்று கேள்வி எழுகிறது. மேலும் பிரியங்கா சீரியசாக ஏதோ சொல்ல வரும்போது காமெடி என்று சிரிக்கும் ராஜூ இங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். அதன்பிறகு ப்ரமோவின் இறுதியில் அண்ணாச்சியின் அருகில் ராஜூ அமர்ந்திருக்கிறார்.
Advertisment
Advertisement
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அண்ணாச்சி ஏன் இப்படி செய்கிறார் என்று கேட்டுள்ளனர். மேலும் அண்ணாச்சியின் நடவடிக்கை சமீப நாட்களாக சரியில்லை எனறும், அவர் பெண்களை டார்கெட் செய்து பேசி வருகிறார் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே இசைவாணி, பாவனி, அக்ஷரா உள்ளிட்டோரை அட்டாக் செய்துள்ள அண்ணாச்சி ஏன் இப்படி இறங்கிவிட்டார் என்று கேள்வி எழுப்பியு்ளளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil