Advertisment

வீட்டை விட்டு போனாலும் அவர் சிங்கம் தான்... ஜி.பி.முத்துவுக்கு பட்டம் கொடுத்த மைனா

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து முதல் நாளில் இருந்தே தன் வீட்டில் இருப்பது போன்று நடந்துகொண்டு அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார்.

author-image
WebDesk
New Update
வீட்டை விட்டு போனாலும் அவர் சிங்கம் தான்... ஜி.பி.முத்துவுக்கு பட்டம் கொடுத்த மைனா

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜி.பி.முத்து வெளியேறினாலும் சிங்கம்போல் வீட்டை காப்பவர் அவர்தான் என்று மைனா குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

விஜய் டி.வி.யின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட்டது வழக்கத்திற்கு மாறாக நிறைய புதுமுகங்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே பரபரப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பங்கேற்ற டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து முதல் நாளில் இருந்தே தன் வீட்டில் இருப்பது போன்று நடந்துகொண்டு அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார். ஆனாலும் வழக்கமான் கலவரங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி கொண்டுதான் இருந்தது. இதனிடையே தனது மகன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் ஜி.பி.முத்து திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், வர இறுதிநாளான இன்று தொகுப்பாளர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கிறார். இது தொடர்பான ப்ரமோ வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரமோவில், இதில் பாம்புபோல் விஷத்தன்மை கொண்டவர் தனலட்சுமி என்று மைனா சொல்கிறார்.

அதன்பிறகு அதேபோல் பலரும் அசீமை நரிபோல் குறுக்குபுத்தி, பாம்மை போல் விஷம் என்று பட்டம் கொடுத்தனர். கடைசியாக சிங்கம்போல் வீட்டை காப்பவர் என்று வரும்போது மைனா இந்த பட்டம் கண்டிப்பாக முத்து அண்ணாவுக்குதான் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை ஜி.பி.முத்துவுக்காகவே பலரும் பார்த்து வந்த நிலையில், அவருக்கான ஆர்மியும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே உருவானது. ஆனாலும் பணம் பேர் புகழ் என எதுவும் வேண்டாம் குடும்பம்தான் முக்கியம் என்று பிக்பாஸ வீட்டில் இருந்து வெளியேறிய ஜி.பி.முத்துவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் அவர் வெளியேறியது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment