/indian-express-tamil/media/media_files/2025/11/04/vj-parvathi-and-divay-2025-11-04-16-46-55.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருக்கும், திவ்யா கணேஷ் – வி.ஜே.பார்வதி இருவருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துளளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும், ரசிகர்கள் நாள்தோறும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவும், கடுமையாக விமர்சனம் செய்யவும் பிக்பாஸ் நிகழச்சியை பார்த்து வருகினறனர். முதலில் திவாகர், அகோரி கலையரசன், பிரவீன் காந்தி, சபரிநாதன். கனி உள்ளிட்ட பல 20 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில். இதில் சிலர் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து வைல்ட் கார்டு என்டரியாக நடிகர் பிரஜின், அமித், திவ்யா, சாண்ட்ரா உள்ளிட்ட 4 பேர் 28-வது நாளில் உள்ளே நுழைந்துள்ளனர். இவர்கள் வந்த பிறகு, பிக்பாஸ் வீடடில் மாற்றம் இருக்கிறதா? அல்லது பழைய நிலையின் தான் உள்ளதா என்பது குறித்த கேள்விகள் அதிகமாகி வரும நிலையில், இதுவரை எந்த சீசனிலும் நடக்காத அடிதடி மோதல் இந்த சீசனில் நடந்துள்ளது. இதில் ஆரம்பம் முதலே கவனம் ஈர்த்து வரும், கமருதீன் பிரவீனை அடித்துவிட்டார்.
இதனிடையே தற்போது திவ்யா கணேஷ் – வி.ஜே.பார்வதி இடையே மோதல் எழுந்துள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக இருக்கம் திவ்யா, பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை படிக்கிறார். அதில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாற போகிறது. ஹோட்டலின் பெயர் ஆஹா ஓஹோ ஹோட்டல். இதில் மேனேஜர் திவ்யா, அசிஸ்டெண்ட் மேனேஜர் பார்வதி என்ற சொல்ல சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார் பார்வதி. அதன்பிறகு சிறந்த சர்வீஸ் செய்யும் ஹோட்டல் ஊழியருக்கு கெஸ்ட் ஒரு ஸ்டார் கொடுப்பதாக சொல்கிறார்.
Paru literally behaves like Diwagar’s mouthpiece? picking pointless fights even after BB warned her. No respect for anyone!
— Hakuna matata :) (@actualspykid) November 4, 2025
But this vaai savudal Paru's being perfectly handled by Divya! Athuke Fyaaar uh Divya unaku🔥👌#BiggBossTamil9#BiggBossTamil
pic.twitter.com/mdxMZuNhTy
அப்போது அந்த ஸ்டார் கெஸ்ட் தான் கொடுப்பாங்களா என்று பார்வதி கேட்க, திவ்யா ஆமாம் என்ற சொல்ல, அப்போது பிக்பாஸ் உங்க மைக்கை சரியாக மாட்டுங்க என்று திவ்யாவிடம் சொல்ல, பார்வதி சிரிக்கிறார். இதை பார்த்து திவ்யா ரொம்ப கேவலமாக இருக்கிறது என்று சொல்கிறார். இதை பார்த்த திவ்யா, நிங்க கொஞ்சம் என்று சொல்லி வாயை மூடு என்பது போல் சைகை காட்டுகிறார். இதை பார்த்த பார்வதி அந்த சைகையை காட்டி அப்படினா என்னங்க என்று கேட்க, திவ்யா கண்டுகொளளாமல் அங்கிருந்து போய்விடுகிறார்.
Parvathy is talking about Divya's gestures, attitude & what she spoke. Clown pls, you are the kevalapatta jenmam of the season. Just look at the way you talk.#BiggBossTamil9pic.twitter.com/MCMmrk6RAp
— ஜமுனா (@jamunah_velu) November 4, 2025
அதன்பிறகு பார்வதி, தொடர்ந்து அவரிடம் கேட்டாலும் அவர் கண்டுகொள்ளவே இல்லை. அதன்பிறகு, பெட்ருமில், திவாகர் மைக் சரியாக மாட்டாமல் இருக்க திவ்யா மாட்ட சொல்கிறார். இதை கேட்டு பார்வதி சத்தம் போட, இதை பார்த்த திவ்யா, நீங்கதான திவாகருக்கு வாயா என்ற கேட்கிறார். பார்வதியும் சமமாக பேசுகிறார். அடுத்து வெளியான ஒரு விடியோவில், இந்த மாதிரி ஆளைத்தான் டைட்டில் வின்னர் ஆக்குவாங்க, சுபிக்ஷா என்ன பண்ணாங்க, அவ பெரிய... மாதிர வந்து பேசுறாங்க. தனக்கு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும செய்யக்கூடிய ஆள் தான் சுபிக்ஷா என்ற சொல்கிறார் பார்வதி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us