காதல், ஆக்ஷன் ஹீரோ, பல கோடி சொத்துக்கு அதிபதி; சூப்பர் ஸ்டார் நடிகர் இந்த சிறுவன் யார் தெரியுமா?

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் யார் தெரியுமா?

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் யார் தெரியுமா?

author-image
D. Elayaraja
New Update
Salman Khan Throwback

பொதுவாக ஒரு முன்னணி நடிகரின் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகும்போது, அவர் யார் என்ற எதிர்பார்ப்புடன் பார்க்கும் ரசிகர்கள், அவர் இந்த நடிகர் தான் என்று தெரிந்தவுடன், அவரா இவர்? அடையாளமே தெரியவில்லையே என்று ஆச்சரியமாக பார்ப்பார்கள். அந்த வகையில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் யார் தெரியுமா?

Advertisment

இந்த செய்தியை மலையாளத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்களில் இவரும் ஒருவர். சுமார் ரூ2,900 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுக்கு சொந்தக்காரரான இவர், காதல், ஆக்ஷன், காமெடி என நடிப்பில் அசத்துபவர். பல ஹிட் மற்றும் மெகாஹிட் படங்களை கொடுத்துள்ள இந்த நடிகர் வேறு யாரும் இல்லை. பாலிவுட்டின் 'சுல்தான்' என்று அழைக்கப்படும் நடிகர் சல்மான் கான் அவர்களின் குழந்தை பருவப் படம் இது. எல்லோரையும் வசீகரிக்கும் புன்னகையுடன் தன் தாயின் மடியில் அமர்ந்திருக்கும் இந்தச் சிறுவன்தான், இன்று பாலிவுட்டை ஆளும் 'கிங் கான்' ஆக மாறியுள்ளார்.

திரைக்கதை எழுத்தாளர் சலீம் கானின் மகனான சல்மான் கான் பிறந்தார். 1980களின் பிற்பகுதியில் சினிமா துறையில் நுழைந்து, இன்று பாலிவுட்டை ஆட்சி செய்யும் 'சல்மானி பாய்' (Sallu Bhai) ஆக மாறிய அவரின் இந்த பயணம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகும். 1989ஆம் ஆண்டு வெளியான சூரஜ் பர்ஜாத்யா இயக்கிய 'மெய்னே பியார் கியா' (Maine Pyar Kiya) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அவர் அறிமுகமானார். 90களில் சல்மான் கான் நடித்த பெரும்பாலான கேரக்டர்களுக்கு 'பிரேம்' என்றே பெயரிடப்பட்டது.

salman-khan-throwback-3-2025-10-10-12-26-51

ஒரு காலத்தில் சல்மான் கான் இன்றைய காலக்கட்டத்தைப் போல ஆக்‌ஷன் ஹீரோவாக இல்லாமல், ரசிகைகளின் விருப்பமான ரொமான்டிக் ஹீரோவாகவே இருந்தார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பட்டியலில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலில் சல்மான் கான் 8-வது இடத்தில் உள்ளார். ஒரு படத்திற்காக இவர் ரூ100 கோடி முதல் ரூ150 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார். இந்தி சினிமாவின் கான் நடிகர்களில் முக்கியமானவராக இருக்கும் சல்மான் கான் இதுவரை தமிழில் நடிக்காத நிலையில், அவரது பல படங்கள் தமிழல் டப்பிங் மற்றும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements
Salman Khan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: