Advertisment

பிரபல நடிகையின் மாதவிடாய் தேதிகளை கேட்ட தமிழ் பட வில்லன் நடிகர்: ஆனால் இதிலும் ஒரு மனிதநேயம்!

அனுராக் காஷ்யப் நடிகை அம்ருதா சுபாஷூடன் நடிக்கும்போது அவரது மாதவிடாய் நாட்கள் குறித்து கேட்டதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
anura

அம்ருதா சுபாஷ் - அனுராக் காஷ்யப்

பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் பிரபல நடிகையின் மாதவிடாய் நாட்களை கேட்டு தெரிந்துகொண்டதாக அந்த நடிகையே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Advertisment

பாலிவுட் சினிமாவில் தனது இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அனுராக் காஷ்யப் தமிழில் நயன்தாரா அதர்வா நடிப்பில் வெளியான இதைக்கா நொடிகள் என்ற படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கததில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே அனுராக் காஷ்யப் நடிகை அம்ருதா சுபாஷூடன் நடிக்கும்போது அவரது மாதவிடாய் நாட்கள் குறித்து கேட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அம்ருதா நேர்காணல் ஒன்றில் கூறுகையில், அனுராக் காஷ்யப்புடன் ஸ்கேர்டு கேம்ஸ் பாகம் 2-ல் நடித்தேன். ஆண், பெண் பேதங்கள் இல்லாமல் இந்த படத்தில் அவருடன் எனது முதல் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தேன்.

அவர் மிகவும் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். அதனால் நெருக்கமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேரங்களை சரியான தேதிகளில் அமைக்க உதவும் வகையில் எனது மாதவிடாய் தேதி குறித்து அவர்தான் என்னிடம் கேட்டறிந்தார். அத்தகைய தேதிகளில் உங்களால் இக்காட்சிகளில் நடிக்க முடியுமா? எனவும் கேட்டார் என்றும் தெரிவித்துள்ளார். அம்ருதா சுபாஷ் சமீபத்தில் வெளியான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரில் நடித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment