Advertisment

ஸ்கின் கலர் டைட் பேண்ட்... சமந்தாவை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு!

இந்தியா திரும்புவதற்கு முன்பாக செர்பியாவில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ள சமந்தா அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

author-image
WebDesk
New Update
Samantha

நடிகை சமந்தா

உடலநிலை பிரச்னையில் இருந்து மீண்டு தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது வெளியிட்டுள்ள நிலை புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் தெலுங்கின் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சமீபகாலமாக இவரது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இடையில் உடல்நல பிரச்சனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ள சமந்தா பிஸியாக நடித்து வரும் நிலையில், ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

அதன் ஒரு படியாக ஆங்கிலத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சிட்டாடல் என்ற வெப் தொடரின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்புக்காக தற்போது படக்குழுவினர் அனைவருடனும் செர்பியா சென்றுள்ள நடிகை சமந்தா, தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டதாக கூறப்டுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

Samantha Dress

நடிகை சமந்தா ஸ்கின் கலர் டைட் பேன்ட்

இந்தியா திரும்புவதற்கு முன்பாக செர்பியாவில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ள சமந்தா, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவ்வப்போது வித்தியாசமான சில புகைப்பவடங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் சமந்தா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமந்தா தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் ஸ்கின் கலரில் டைட்டான பேன்ட் அணிந்துள்ளார். திடீரென இந்த புகைப்படத்தை பார்பபவர்களுக்கு கீழே பேன்ட் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படும வகையில் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா நடித்து வரும் சிட்டாடல் வெப் தொடரில் ஒரிஜினல் வெர்ஷனில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது அவரின் கேரக்டரில் தான் சமந்தா நடித்து வருகிறார். மேலும் தி ஃபேமிலிமேன் வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இயக்கி வரும் இந்த தொடரில் வருண் தவான் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment