நடிப்புக்கு 8 இயக்குனர்கள்; உதவியாளர்களாக வாரிசு பிரபலங்கள்: ‘தக் லைப்’ சுவாரஸ்ய அம்சங்கள்!

மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு, அதிக இயக்குனர்கள் நடித்த படம் என்ற பெயரை கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான 'தக் லைப்' படத்திற்கு கிடைத்துள்ளது.

மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு, அதிக இயக்குனர்கள் நடித்த படம் என்ற பெயரை கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான 'தக் லைப்' படத்திற்கு கிடைத்துள்ளது.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thug Life 8 Directors

தமிழ் சினிமாவில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 10 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு சமீபத்தில் வெளியான ட்ரான் படத்தில் 5 இயக்குனர்கள் நடித்திருந்த நிலையில், தற்போது கமல்ஹாசனின் ‘தக் லைப்’ படத்தில் 8 இயக்குனர்கள் நடித்துள்ளனர் என்பது சுவாரஸ்ய தகவல். 

Advertisment

1987-ம் ஆண்டு வெளியாக நாயகன் படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் மணிரத்னம் – நடிகர் கமல்ஹாசன் இருவரும் 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘தக் லைப்’. இந்த படத்தின் அறிவிப்பு வெளியாக உடனே நாயகன் அளவுக்கு இருக்குமா? அதை விட உயர்வாக இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியது தக் லைப் திரைப்படம்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 5-ந் தேதி வெளியாக தக் லைப் திரைப்படம் எதிர்மறைான விமர்சனங்களை பெற்று வருகிறது. கமல்ஹாசனின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், வலுவில்லாத திரைக்கதை படத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, கமல்ஹாசனின் காதலியாக வரும் த்ரிஷாவை சிம்பு அழைத்து செல்வது போன்ற காட்சிகள், படத்தின் மீதான கடுமையாக விமர்சனத்திற்கு வழி செய்தது. முதல்நாள் முதல் காட்சி முடியும் முன்பே படத்தின் ரிசல்ட் தெரிவித்துவிட்டதால் அடுத்தடுத்த காட்சிகள் வீழ்ச்சியானது. 

‘தக் லைப்’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும்’ படத்தில் சுவாரஸ்யமான 2 அம்சங்கள் இருக்கிறது. இந்த படத்தில் 8 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். 

Advertisment
Advertisements

கமல்ஹாசன்

சேச்சி 420 என்ற இந்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக கமல்ஹாசன், அடுத்து ஹேராம் என்ற படத்தை இந்தி மற்றும் தமிழில் இயக்கினார். அதன் பிறகு விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களை இயக்கியிருந்தார். மேலும் குரு, ராஜபார்வை, குணா, உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 

சிம்பு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சிம்பு, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் சிம்பு, மன்மதன் என்ற படத்தில் கதை திரைக்கதை எழுதியிருந்த நிலையில், வல்லவன் படத்தை கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். 

நாசர்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் முக்கியமானவராக இருக்கும், நடிகர் நாசர் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்துள்ள நிலையில், பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1995-ம் ஆண்டு வெளியாக அவதாரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நாசர், அடுத்து தேவதை, மாயன், பாப்கார்ன், ஆகிய படங்களை இயக்கியிருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு இயக்கிய சன் சன் தாத்தா என்ற படம் தான் நாசர் இயக்கிய கடைசி படம்.

ஜோஜூ ஜார்ஜ் 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜோஜூ ஜார்ஜ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, புத்தம்புது காலை விடியாதா? ஃபப்பூன், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்திருந்த இவர், தக் லைப் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பனி என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். 

பாபுராஜ்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பாபுராஜ், பரசுராம், ஜனா, ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதும் திறமை கொண்ட இவர், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பிளாக் தல்யா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு, மனுஷ்யமிர்கம், பிளாக் காபி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

தனிகெல்லா பரணி

தெலுங்கு சினிமாவின் முன்னணி கேரக்டர் நடிகராக இருக்கும் தனிகெல்லா பரணி 1994-ம் ஆண்டு வெளியான வீட்ல விஷேஷங்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, கம்பீரம் படத்தில் வில்லனாக நடித்திருந்த இவர், கில்லி படத்தில் பிரகாஷ்ராஜூன் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். பல படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியுள்ள இவர், தெலங்கில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான மிதுனம் என்ற படத்தை இயக்கியிருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தான் இந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார். 

மகேஷ் மஞ்ச்ரேக்கர்

இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் 2013-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் நடித்திருந்த அவர், தற்போது தக் லைப் படத்தில் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு வாஸ்தவ்:தி ரியாலிட்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், 30 படங்களை இயக்கியுள்ளார். தற்போது, ஏக் ராதா ஏக் மீரா, நிரவாதி ஆகிய படங்களை இயக்கி வருகிறார். 

சின்னி ஜெயந்த்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் முத்திரை பதித்தவர் சின்னி ஜெயந்த். மிமிக்ரி கலைஞராகவும் தன்னை பல இடங்களில் நிரூபித்த இவர், தற்போது பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு வெளியான உனக்காக மட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்து, 2007-ம் ஆண்டு கானல் நீர், 2010-ம் ஆண்டு நீயே என் காதலி ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

'தக் லைப்' படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு இயக்குனர் தான். ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், முன்னணி நடிகர்ளின் பல படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியாக லீ மஸ்க் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்பாக 99 சாங்ஸ் என்ற படத்திற்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார். 

நாசர் இயக்கிய மாயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கற்றது களவு என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார். அதேபோல் இந்த படத்தில், குஷ்பு மகள் அனந்திகா, நடிகர் ரஹ்மான் மகள் அலீஷா ஆகியோருடன், லப்பர் பந்து படத்தில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த படத்தில் மணிரத்னத்தில் உதவியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இதில் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி கமல்ஹாசனின் மகளாக இந்த படத்தில் நடித்துள்ளார். 

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: