/indian-express-tamil/media/media_files/2025/10/11/ajith-car-2025-10-11-23-17-25.jpg)
கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமார் தனது ரேசிங் அணியுடன், பார்சிலோனாவில் நடைபெறும் சீசன் இறுதிப் போட்டியில் ரோமெய்ன் வோஸ்னியாக்குடன் இணைந்து ஜி.டி.4 (GT4) ஐரோப்பிய தொடரின் கடைசி பந்தயத்தில் பங்கேற்க உள்ளதாக அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், படங்களில் நடிப்பதை தவிர, துப்பாக்கிச்சுடுதல், பைக்ரைடு செல்லுதல், மற்றும் கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்பது என விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்து முடித்துள்ள அஜித், துபாய் மற்றும் சில நாடுகளில் நடைபெறும், கார் ரேஸில் பங்கேற்க உள்ளார்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு, அஜித் குமார் கார் ரேஸிங் என்ற நிறுவனத்தை தொடங்கிய அஜித், தனது கார் ரேஸிங் அணியையும் கட்டமைத்தார். தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள அஜித், கார் ரேஸிங் பந்தையத்திற்கு தாயராகும் வகையில், துபாயில் பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அவர் விபத்தில் சிக்கியதை பார்த்து ரசிகர்கள் பலரும் ரேஸ் வேண்டாம், நீங்கள் திரும்பி வந்துவிடுங்கள் என்று இணைதளங்களில் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட அஜித், விபத்துகளைத் தாண்டி ஏன் இந்த விளையாட்டைப் பார்க்க வேண்டும் என்பதையும் தான் எதிர்கொண்ட காயங்களில் பெரும்பாலானவை படப்பிடிப்பின்போது நிகழ்ந்தன என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அந்தச் சம்பவங்கள் தன்னை அபாயங்களை எடுக்காமல் தடுக்கவில்லை என்றால், பந்தயச் சுற்றுகளில் நடக்கும் விபத்துகள் ஒருபோதும் தடுக்காது என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
Season finale in Barcelona 🇪🇸🏁
— Suresh Chandra (@SureshChandraa) October 11, 2025
Ajith Kumar teams up with Romain Vozniak for the last race of the GT4 European Series!
One final push to wrap up an amazing season for Team Ajith Kumar Racing 🔥#AjithKumar#RomainVozniak#AjithKumarRacing#GT4#Barcelona#AKRacing#Motorsport… pic.twitter.com/08lVp8t9zS
இதனிடையே அஜித் தற்போது, தனது கடைசி கார் ரேஸிங் பந்தயத்தில் பங்கேற்க உள்ளதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். அதில், பார்சிலோனாவில் நடைபெறும் சீசன் இறுதிப் போட்டியில் ரோமெய்ன் வோஸ்னியாக்குடன் இணைந்து ஜி.டி.4 (GT4) ஐரோப்பிய தொடரின் கடைசி பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்க உள்ளார். அஜித் குமார் ரேசிங் அணிக்கு ஒரு அற்புதமான சீசனை முடிக்க ஒரு இறுதி முயற்சி என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.