Advertisment

முதல் ஆளாக விஜய் பட இயக்குனரை வாழ்த்திய அஜித்: அப்புறம் ஏம்பா ரசிகர்கள் இப்படி சண்டை போடுறீங்க!

லியோ படத்திற்கு பிறகு தளபதி விஜய் அடுத்து தனது 68-வது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Ajith Venkat

அஜித் - வெங்கட் பிரபு

லியோ படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய் அடுத்து தனது 68-வது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள லியோ படத்தை லலித் தயாரித்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், எல்சியூ பாணியில் படத்தின் கதை இருக்குமா என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

இதனிடையே லியோ படத்திற்கு பிறகு தளபதி விஜய் அடுத்து தனது 68-வது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஜாலி இயக்குனர் என்று அழைக்கப்படும் வெங்கட் இயக்கத்தில் விஜய் நடிப்பதால் இந்த படம் ஜாலியாக இருக்குமா அல்லது அரசியல் கதையாக இருக்குமா என்று யோசித்து வருகின்றனர்.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான உடன், முதல் ஆளாக அஜித் தனதுக்கு போன் செய்து வாழ்த்துக்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே அஜித் நடிப்பில் மங்காத்தா என்று மெகாஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு அடுத்து அந்த படத்தின் 2-ம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், தளபதி 68 படம் தற்போது ப்ரீ புரொடக்‌ஷனில் உள்ளதாகவும், வரும் நவம்பர் 23 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய் அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக்கொள்ளும் நிகழ்வு அவ்வப்போது நடந்து வரும் நிலையில், விஜய் பட இயக்குனருக்கு அஜித் வாழ்த்துக்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment