சிம்பு நண்பன், விவேக்குடன் காமெடி; ரம்பாவுடன் ஹிட் பாடலில் டான்ஸ் ஆடியவர்: இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

சில நடிகர்கள் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், கூட தங்கள் திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுவார்கள். அதன்பிறகு, அவர் சினிமாவில் இல்லை என்றாலும், அவரைப்பற்றி ஒரு கூட்டம் பேசிக்கொண்டே இருக்கும்.

சில நடிகர்கள் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், கூட தங்கள் திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுவார்கள். அதன்பிறகு, அவர் சினிமாவில் இல்லை என்றாலும், அவரைப்பற்றி ஒரு கூட்டம் பேசிக்கொண்டே இருக்கும்.

author-image
D. Elayaraja
New Update
Danny Kanikaraj

பொதுவாக சினிமாவில், ஒரு சில நடிகர்கள் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், கூட தங்கள் திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுவார்கள். அதன்பிறகு, அவர் சினிமாவில் இல்லை என்றாலும், அவரைப்பற்றி ஒரு கூட்டம் பேசிக்கொண்டே இருக்கும். சில ஆண்டுகள் கழித்து அவரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகும்போது அவரா இவர் என்ற ஆச்சரியமும் ஏற்படும். அந்த வகையில் ஒரு நடிகர், டான்சர் ஒருவரின் த்ரோபேக் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

Shooting in progress

அந்த நட்சத்திரம் வேறு யாரும் இல்லை. நடிகரும் டான்சருமான டேனி கன்னிகாராஜ் தான். விவேக்குடன் இணைந்து, பல படங்களில் நடித்துள்ள டேனி, சிம்புவுடன் இணைந்து, குத்து படத்தில் அவரின் நண்பராக நடித்துள்ளார். அதேபோல் சிம்பு ஹீரோவாக அறிமுகமாக காதல் அழிவதில்லை திரைப்படத்தில் அவருடன் இணைந்து ராமர், லட்சுமணன் வேடமணிந்து நடித்திருப்பார். இந்த இரு படங்களுமே நல்ல வெற்றிப்படங்களாக அமைந்தது. சிம்புவுக்கும் டேனிக்கும் இடையே நெருங்கிய நட்பு இருக்கிறது.

கார்த்திக், பி.வாசு கூட்டணியில் வெளியான சீனு படத்தில் விவேக், இசை ஆல்பம் தொடர்பான காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த காட்சிகளில், விவேக்கிற்கு, ஐடியாக கொடுக்கும் கேரகடரில் நீண்ட தலைமுடியுடன் டேனி நடித்திருப்பார். மின்னலே படத்தை தொடர்ந்து விவேக்குடன், ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த டேனி சமீபத்தில் வெளியான அக்யூஸ்ட் என்ற படத்தில், போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.

Advertisment
Advertisements

பல வெற்றிப்படங்களில், காமெடி, டான்சர் என பலதரப்பட்ட கேரக்டரில் நடித்துள்ள டேனி, கதிர் இயக்கத்தில் வெளியான காதலர் தினம் படத்தில் நடிகை ரம்பாவுடன் இணைந்து நடனமாடியிருப்பார். ‘ஓஹா மரியா’ என்ற பாடல் இன்றுவரை இளைஞர்களில் ஃபெவரெட் பாடலாக இருக்கிறது, இந்த பாடலில் தான் ரம்பா நடனமாடியிருப்பார். அவருடன் சேர்ந்து டேனியும் ஆடியிருப்பார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரம்பா கலந்துகொண்டபோது, டேனி இந்த பாட்டுக்கு நடனம் ஆடியிருந்தார். இதை பார்த்தவுடன் அவர் டேனி தான் என்று கண்டுபிடித்தார் ரம்பா.

ஆடி முடிந்தவுடன், இந்த பாட்டுக்கு நான் உங்களுடன் நடனம் ஆடியிருக்கிறேன் என்று சொல்ல, ரம்பாவும் ஆமாம் என்று சொல்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவரா இவர் எவ்வளவோ மாறிட்டாரே என்று கூறி வருகின்றனர். 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: