க்ளைமேக்ஸா, இங்க இன்ட்ரவல்ல இருந்தே சரி இல்லையே; பாரதிராஜா கதையில் திருத்தம் சொன்ன பாக்யராஜ்!

சுதாகர், தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்கள், இன்சர்ட் செய்துகொண்டு கையில் ஆல்பத்துடன் வருவார்கள். இவர்களை பார்த்தவுடனே நான் ஃபங்க் ஆகிட்டேன்.

சுதாகர், தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்கள், இன்சர்ட் செய்துகொண்டு கையில் ஆல்பத்துடன் வருவார்கள். இவர்களை பார்த்தவுடனே நான் ஃபங்க் ஆகிட்டேன்.

author-image
D. Elayaraja
New Update
Bharathi raja Bhagyara

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட பாக்யராஜ், புதிய வார்ப்புகள் என்ற தனது குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். ஆனால் சினிமாவில் நாயகனாக நடிக்கும் ஆர்வத்தில் வந்திருந்தாலும், என்னைவிட பர்னாலிட்டியாக இருக்கும் பலரையும் பார்த்து டெக்னிக்கலா ஏதாவது பண்ணலாம் என்று முயற்சித்ததாக பாக்யராஜ் கூறியுள்ளார்.

Advertisment

சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை சென்னைக்கு வந்த புதிதில் இருந்தது. ஆனால் இங்கு வந்தபோது சுதாகர், தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்கள், இன்சர்ட் செய்துகொண்டு கையில் ஆல்பத்துடன் வருவார்கள். இவர்களை பார்த்தவுடனே நான் ஃபங்க் ஆகிட்டேன். இவர்களுடன் நடிப்பில் வேண்டாம், டெக்னிக்கலா எதாவது மூவ் பண்ணுவோம் என்று தான் இயக்கத்தை தேர்வு செய்தேன். உதவி இயக்குனர் ஆனவுடன், இயக்குனர் ஆக வேண்டும் என்று நினைத்தேன் நடிக்க நினைக்கவில்லை.

16 வயதினிலே படத்தில், அந்த வைத்தியர் கேரக்டர் நடிக்க ஆள் இல்லை என்பதால் என்னையே நடிக்க சொன்னார். அதனால் நடித்தேன். கிழக்கே போகும் ரயில் படத்தில், ஒரு ஜூனியர் நடிகர் கூடவே இருக்க வேண்டும் என்பதால் அவருக்கு தனியாக செலவு செய்ய முடியாது என்று என்னையே வைத்துக்கொண்டார். சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் அப்படித்தான் கமல்ஹாசனுடன் நடித்தேன். சிகப்பு ரோஜாக்கள் முடிந்தவுடன் நான் சுவரில்லாத சித்திரங்கள் படத்தை ஷூட்டிங் தொடங்க ரெடியாகிட்டேன். ஆனால் இயக்குனருக்கு புதிய வார்ப்புகள் கதை பிரச்னை ஆகிவிட்டது.

அப்போது நான் கோபத்தில் இருப்பதால், என்னை அழைக்க, பாரதிராஜா விஜயன் என்பவரை அனுப்பினார். நான் இயக்குனர் கூப்பிட்டால் தான் வருவேன் என்று சொன்னேன். அதன்பிறகு அவரே போன் செய்து கூப்பிட்டார். நானும் போனேன். கதையை சொல்லிவிட்டு, இதில் க்ளைமேக்ஸ் எனக்கு திருப்தியாக இல்லை என்று சொன்னார். ஆனால் நான் இன்ட்ரவல்ல இருந்தே கதை சரியில்லை என்று சொன்னேன். அவர் டென்ஷன் ஆகிவிட்டார். வாத்தியாருக்கும் ரதிக்கும் கல்யாணம் ஆகிட்டா அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது.

Advertisment
Advertisements

க்ளைமேக்ஸில் தான் கல்யாணம் நடக்க வேண்டும், என்ட விடுங்க நான் மாத்துரேன் என்று சொன்னேன். அதன்பிறகு அவர் அனுமதியுடன் கதையை மாற்றினேன் என பாக்யராஜ் கூறியுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: