வில்லனாக நடிக்க விரும்பும் ஹீரோ
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து ஓ மை கடவுளே, சமீபத்தில் வெளியான மன்மத லீலை, வேழம் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவெற்பை பெற்றது. தற்போது ஹீரோவாக நடித்து வரும் அசோக் செல்வன் தான் வில்லனாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் மாறுபட்ட கதையம்சம் உள்ள படமாக இருக்க வேண்டும் அதனால் சிறந்த வில்லன் கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தள்ளிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ் படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது நடித்துள்ள படம் டிரைவர் ஜமுனா. இந்த படத்தில் அவர் வாடகை கார் ஓட்டுநர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று வெளியாக வேண்டிய இந்த படம் தற்போது திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டள்ளது.
திருமணத்திற்கு தேதி குறித்த கௌதம் – மஞ்சிமா
தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களுக்கு திரைத்துரையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது கௌதம் மஞ்சிமா திருமணம் வரும் 28-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் கார்த்திக் சுப்புராஜூன் இணைந்த விஜய்சேதுபதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்துள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
வசூலில் களைகட்டும் லவ்டுடே
கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ்டுடே படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி வெளியானது இளைஞர்களை டார்கெட் செய்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழகத்தில் இந்த படம் இதுவரை 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“