Advertisment

மோனிகா லாஸ்லியாவின் தோழியா? கவின் - லாஸ்லியா காதல் முறிவுக்கு காரணம் இதுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவின் – லாஸ்லியா காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறிவிட்டனர்

author-image
WebDesk
New Update
Kavin Laslya

கவின் - லாஸ்லியா - மோனிகா

நடிகர் கவின் தனது நீண் நாள் காதலி மோனிகாவை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகை லாஸ்லியாவும் மோனிகாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணயைத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கவின். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய கவின் தொடர்ந்து பல குறும்படங்களில் நடித்து தன்னை நடிகரைாக மெருகேற்றிக்கொண்டார். அதன் மூலம் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த கவின் அடுத்து சரவணன் மீனாட்சநி தொடரில் வேட்டையன் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில பிரபலமானார்.

தொடர்ந்து ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த கவின், விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான சத்ரியன் படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு 2019-ம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கவினுக்கு வெற்றி கிடைக்காத நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற கவின் அடுத்து லிப்ட் என்ற ஹாரார் படத்தில் நடித்தார். லாக்டவுன் காலத்தில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று கவினுக்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியானா டாடா படம் கவினுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்து பலரின் பாராட்டுக்களை பெற காரணமாக இருந்தது.

Losliya Monica

Losliya Monica

தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வரும் கவின், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், வரும் ஆகஸ்ட் 20-ந் தேதி அவரின் திருமணம் என்று கூறப்படுகிறது. இவர் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் பெயர் மோனிகா என்றும், தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் அவரை கவின் ரகசியமாக காதலித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், நடிகை லாஸ்லியாவும், மோனிகாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணயைத்தில் வைரலாகி வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவின் – லாஸ்லியா காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் நாங்கள் காதலிக்கவில்லை எங்கள் கெரியரில் கவனம் செலுத்த போகிறோம் என்று கூறிவந்தனர். ஆனால் தற்போது கவின் திருணம் செய்துகொள்ள உள்ள மோனிகாவும் – லாஸ்லியாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவரும் நண்பர்களா? அவ்வது லாஸ்லியாவுடன் பணியாற்றியுள்ளாரா? இதனால் தான் கவின் லாஸ்லியா காதல் பிரிந்ததா என்று நெட்டிசன்கள் பல அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment