விஜயகாந்த் என்னை அவ்வளவு பாசமாக பார்த்துக்கொண்டார். ஆனால் அவரது பாசம் அப்போது எனக்கு புரியவில்லை என்று நடிகரும் திரைக்கதை ஆசிரியருமான லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கேப்டன் என்ற பட்டத்துடன் பல வெற்றிப்படங்களை கொடுத்துவர் விஜயகாந்த். சினிமாவில் அனைத்து கலைஞர்களுக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த திட்டத்தையும் செயல்படுத்திய விஜயகாந்த் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அரசியலிலும் கால்பதித்த விஜயகாந்த் குறுகிய காலத்தில் எதிர்கட்சி தலைவராக உயர்ந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். ஆனாலும் அவர் ஆக்டீவாக இருந்த காலக்கட்டம் குறித்து அவருடன் இணைந்து பணியாற்றிய பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் லிவிங்ஸ்டன் விஜயகாந்த் குறித்து கூறுகையில், விஜயகாந்த் சாருக்கு என்னை மிகவும் பிடிக்கும். அவரது அனைத்து படத்திலும் எனக்கு ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அதனால் அவருடன் நிறைய படங்களில நடித்திருக்கிறேன். கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தேன். அதற்கு முன்பு ஆர்.கே.செல்வமணி இயக்கிய புலன் விசாரணை படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது.
ஆனந்த ராஜ் நடித்த அந்த கேரக்டரில் நடிக்க விஜயகாந்த் என்னை தான் நடிக்க சொன்னார். அந்த நேரத்தில் ஏதோ ஞாபகத்தில் முட்டாள் தனமாக அந்த அருமையான கேரக்டரை விட்டுவிட்டேன். இது எல்லாத்துக்குமே விஜயகாந்த் சார்தான் என்னை ஊக்கப்படுத்தினார். ரொம்ப நல்ல மனிதர் அவர் திரும்பவும் மீண்டு வந்து நல்லபடியா வாழைனும். விஜயகாந்த் சார் போல் ஒரு நல்ல மனிதனை நான் பார்த்ததே இல்லை.
விஜயகாந்த் - லிவிங்ஸ்டன்
நான் அவருடன் இணைந்து நடித்த முதல் படம் பூந்தோட்ட காவல்கரான். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக போகும்போது அவருக்கு ஏ.சி டிக்கெட் போட்டார்கள் அதேபோல் எனக்கும் ஏ.சி டிக்கெட். வில்லனாக எனக்கு முதல் படம் சாதாரன டிக்கெட் கூட கொடுத்திருக்கலாம். ஆனால் என்னையும் அவருக்கு சமமமாக அமைத்து சென்றார். இதை பார்த்து யூனிட்டில் இருந்த பலருக்கு பொறாமை.
படப்பிடிப்பு தளத்தில் தங்கும்போது அவர் ரூமுக்கு பக்கத்திலேயே எனக்கும் ரூம் கொடுத்தார்கள். என் மீது அவருக்கு அளவுகடந்த அன்பு. பூந்தோட்ட காவல்காரன் படத்தில் பல சீன்களை இப்படி பண்ணாலம் அப்படி பண்ணலாம் என்று சொல்லிக்கிட்டே இருப்பேன். அப்போது விஜயகாந்த் லிவிங்ஸ்டன் சொல்வது போல் செய்யுங்கள் என்று சொல்வார். அந்த படம் முழுவதும் அவர் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்.
அதேபோல் எனக்காக மதுரையில் இருந்து பொள்ளாச்சிக்கு ஐரமீன் குழம்பு கொண்டு வந்தார். அந்த படத்தில் அவருக்கு ஒரே ட்ரெஸ் தான். ஆனால் நான் பணக்கார வில்லன் என்பதால் எனக்கு பல ட்ரெஸ் கொடுத்தார்கள். இதற்காக மும்பையில் இருந்து பல விதமான ட்ரெஸ் வரவழைத்து கொடுத்தார். அந்த அளவிற்கு என் மீது பாசமாக இருந்தார். நான் தான் அதை புரிந்துகொள்ளவில்லை.
அவர் என் மீது எவ்வளவு அன்பாக இருந்தாரோ அதே அளவு நான் அவரிடம் அன்பாக இல்லை. நான் ஒரு கிருக்கன் அந்த நேரத்தில் அப்படி நடந்துகொண்டேன். அந்த அன்பை என்னால் உணர முடியவில்லை. அதை நினைத்து இப்போ நான் வருத்தப்படுகிறேன். சமீப காலமாக நான் அவரிடம் பேசவில்லை. அதுவே வேதனையாக இருக்கிறது. நல்லவன் வாழ்வான் தருமம் தலைகாக்கும் என்பது உண்மையாக இருந்தால் அவர் திரும்பவும் மீண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“