நான் நடிக்க வேண்டிய படம், கையை இறுக்கி பிடித்த கமல்ஹாசன்; நெப்போலியன் ப்ளாஷ்பேக்!

அந்த கதை நான் தான் நடிக்க வேண்டியது. நான் செய்திருந்தாலும் இந்த அளவு செய்திருக்க முடியாது. ரொம்ப அற்புதமாக இருந்தது என்று சொல்லி பாராட்டினார்.

அந்த கதை நான் தான் நடிக்க வேண்டியது. நான் செய்திருந்தாலும் இந்த அளவு செய்திருக்க முடியாது. ரொம்ப அற்புதமாக இருந்தது என்று சொல்லி பாராட்டினார்.

author-image
D. Elayaraja
New Update
Kamal Nepo

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து அசத்திய நடிகர் நெப்போலியன் ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவேடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில். நடிகை குஷ்பு மற்றும் ராதிகாவுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

Advertisment

சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய நெப்போலியன், இரண்டுபேருமே மிகவும் பெரிய நடிகைகள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பயங்கராமாக நடிப்பார்கள். அவங்களுக்கு நிகரைா நடிக்க முடியவில்லை என்றாலும் அதில் குறை வந்துவிட கூடாது என்ற பயத்தில் தான் நடிப்பேன். ராதிகாவுடன் 3-4 படம் செய்துட்டேன். குஷ்புவுடன் 7 படம் செய்துட்டேன். இரண்டு பேரும் உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள். கேப்டன் மகள் நடிக்கும்போது குஷ்புவும் நானும் போய்விட்டோம் இரண்டாவது நாள் ஷூட்டிங்.  

முதல் நாள் ஷூட்டிங்கில் எல்லாரும் வேலை செய்வதை பார்த்த குஷ்பு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. அடுத்த நாள், ஷூட்டிங் வரும் போது 120 சோட்டர் வந்து இறங்குது. எல்லாத்துக்கும் சோட்டர் கொடுத்தும் குளிரில் நீங்கள் கஷ்டப்படுகிறீங்க என்று உடனே கொடுத்தாங்க. அந்த ஒரு மனிதத் தன்மையை ஒரு கதாநாயகியாக குஷ்புவுடன் நான் பார்த்தது வேற யாரிடமும் பார்க்கவில்லை. அந்த மாதிரி நிறைய உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர். ரெண்டுபேரும் சினிமாவில் பெரிய ஜாம்போவானா இருந்தாங்க. இன்னிக்கும் அவர்கள் சின்ன திரையில் நடிக்கிட்டு இருக்காங்க.

உழைப்பாளி படம் ரிலீஸ்க்குப் பெரிய பிரச்சினை வந்தது. அப்போ ராகவேந்திர மண்டத்தில் ரஜினி ஒரு மீட்டிங் எல்லா நடிகர்களும் மீட்டிங். ரஜினி கமல் இருவரும் அங்க உட்காந்திருக்காங்க. நான் போய் இறங்கி அவர்களுக்கு வணக்கம் சொன்னேன். அப்போது கமல் என் கையை இறுக்கி பிடித்துக்கொண்டு. உங்களின் சீவலப்புரி பாண்டி படம் பார்த்தேன். ரொம்ப அர்ப்புதமான நடிப்பு. அந்த கதை நான் தான் நடிக்க வேண்டியது. நான் செய்திருந்தாலும் இந்த அளவு செய்திருக்க முடியாது. ரொம்ப அற்புதமாக இருந்தது என்று சொல்லி பாராட்டினார்.

Advertisment
Advertisements

எனக்கு அப்படியே சிலித்துரிச்சி. எவ்வளவு பெரிய நடிகர் என்னை இப்படியே பாராட்டுகிறாரே என்ற நினைத்தேன். அதன்பிறகு, ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், சரத், முரளி, ராம்கி எல்லாரோடும் நடிச்சிருக்கேன். உங்களோடுதான் நடிக்கல. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீங்க நல்லா இருக்கும் என்ற அவரிடம் கேட்டபோது பாப்போம் பாப்போம் என்று சொன்னார். 95 –ல் நான் கேட்டேன் அவர் 3 வருடம் கழித்து 98 –ல் என்னை அழைத்து, அப்போது எனக்கு ஒரு கதை சொன்னார். பிரமித்து போய்விட்டேன். ஆனால் அந்த கதையில் நான் வில்லன் என்பதால் வேண்டாம் என்று மறுத்துவி்ட்டேன்.

அதன்பிறகு அவர் கூப்பிடவே இல்லை. அவசரப்பட்டு அவர் கொடுத்த வாய்ப்பை மறுத்துவிட்டோமோ என்று நினைத்தேன். ஆனால் 2004ல் திடீரென அழைத்து கதை சொன்னார். அதில் பாசிட்டீவ் என்றவுன் உடனே ஒப்புக்கொண்டேன். அதுதான் விருமாண்டி. நல்லப்ப நாய்க்கர் என்ற ஒரு அற்புதமான கேரக்டரல் நடித்தேன். அந்த படத்தில் பெரிய அளவிலே என் பேருவந்துச்சு. அடுத்து தசாவதாரம். தசாவதாரத்திற்கு கூப்பிடுட்டார் என்று நெப்போலியன் மனம் திறந்து பேசியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: