தனுஷ் - தனுஷ், யாரோட பெயர் யாருக்கு? பெயருக்கான ரகசியம் உடைத்த நெப்போலியன்: இப்படி ஒரு சம்பவம்!

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நிலையில், நெப்போலியன் மகன் தனுஷ்க்கும் இவருக்கும் ஒற்றுமை இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நிலையில், நெப்போலியன் மகன் தனுஷ்க்கும் இவருக்கும் ஒற்றுமை இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

author-image
D. Elayaraja
New Update
Dhanush vs dhanush

தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கிய ஒரு நடிகராக வலம் வரும் தனுஷ், திரைப்படத்திற்காக இந்த பெயர் பெற்றிருந்தாலும், அவரது உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு. இந்த பெயர் தனுஷ் என்று மாறியதற்கு முக்கிய காரணம் நடிகர் நெப்போலியன் தான். அவரது மகன் பெயரும் தனுஷ். இந்த பெயர் மாற்றம் எப்படி வந்தது என்பது குறித்து நெப்போலியனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

கடந்த 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தனுஷ். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு, அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து நடித்த 3-வது படமான திருடா திருடி, தமிழ் சினிமாவில் அந்த வரும் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது.

அதன்பிறகு தேவதையை கண்டேன், அது ஒரு கனாக்காலம், புதுப்பேட்டை, பொல்லாதவன், அசுரன், ஆடுகளம் என பல வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ், இயக்குனராக பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என 4 படங்களை இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் வெளியான இட்லி கடை திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமையுடன் இருக்கும் தனுஷ் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

வெங்கடேஷ் பிரபு என்று பெயர் சினிமாவுக்காக தனுஷ் என்று மாறுவதற்கு முக்கிய காரணம் நடிகர் நெப்போலியன் தான். தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கததில் 1997-ம் ஆண்டு வெளியான எட்டுப்பட்டி ராசா என்ற படத்தில் நெப்போலியன் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தனுஷ் 10-ம்வகுப்பு படித்துள்ளார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து கரிசக்காட்டு பூவே என்ற படத்திலும் இருவரும் இணைந்துள்ளனர். இந்த படங்களின் படப்பிடிப்பு சமயத்தில், தனுஷ் நெப்போலியன் மடியில் அமர்ந்துகொண்டு விளையாடியுள்ளார்.

Advertisment
Advertisements

கரிசக்காட்டு பூவே திரைப்பட ஷூட்டிங்கின்போது நெப்போலியனுக்கு மகன் பிறந்துள்ளார். இதற்கு வாழ்த்துக்கள் சொன்ன, கஸ்தூரி ராஜா பையனுக்கு என்ன பெயர் என்று கேட்க,தனுஷ் என்று நெப்போலியன் கூறியுள்ளார். ஏன் தனுஷ் ராசியா என்று கஸ்தூரி ராஜா கேட்க, இல்லை சார் அவன் சிம்மராசி தான். தனுஷ் என்றால் வில் அம்பு, வில்லை எவ்வளவு வேண்டுமானாலும் வளைக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் விட்டுவிட வேண்டும். இல்லை என்றால் அடித்துவிடும். அதுபோலத்தான் நானும் எல்லோர் பேச்சையும் கேட்போன், கோபம்வந்தால் மதிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஒரு பெயருக்கு இவ்வளவு அர்த்தம் யாரும் சொன்னதே இல்லை என்று ஆச்சரியப்பட்ட கஸ்தூரி ராஜா தனது மகன் வெங்கடேஷ் பிரபு துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகும்போது அவரது பெயரை தனுஷ் என்று மாற்றி அறிமுகம் செய்துள்ளார். இதை பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் வீடியோ காலிங் மூலம் பங்கேற்ற நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார். இந்த நேர்காணலில் கஸ்தூரி ராஜாவும் பங்கேற்றிருந்தார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: