/indian-express-tamil/media/media_files/2025/10/27/mr-madras-sarathkumar-2025-10-27-13-27-53.jpg)
மிஸ்டர் மெட்ராஸ் சரத்குமார் - காஞ்சனா Photograph: (Venkatramanan X Page)
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பலரதப்பட்ட கேரக்டரில் நடித்து அசத்தியுள்ள நடிகர் சரத்குமார், காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததும், அதற்காக தான் வைத்த கண்டிஷன் குறித்தும் சரத்குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1974-ம் ஆண்டு பல்கலைகழக அளவில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்ற சரத்குமார், 1988-ம் ஆண்டு வெளியான கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். அதன்பிறகு விஜயகாந்த் நடித்த புலன்விசாரணை உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருந்த சரத்குமார், ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார், இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றிப்படங்களாக மாறியுள்ளது,
குறிப்பாக சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, சிம்மராசி உள்ளிட்ட படங்கள், தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக இன்றும் சரத்குமாருக்கு தமிழ் சினிமாவின் அடையமாக இருக்கிறது. தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சரத்குமார் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஜக்குபாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பிறகு முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கிய சரத்குமார், சமீபத்தில் வெளியான டியூட் படத்தில் கூட, நாயகனிக் மாமா கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
ஜக்குபாய் படத்திற்கு பிறகு, அடுத்து சரத்குமார் நடிக்கும் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், திடீரென காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்த படத்தில் சரத்குமார் நடிக்கிறார் என்ற தகவலே பலரும் அறிந்திராத ஒரு தகவலாக இருந்ததால், படத்தில் அவரை பார்த்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடித்தது எப்படி, படம் வெளியானபோது எப்படி இருந்தது என்பது குறித்து சரத்குமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Sarath Kumar, once upon a time 😳 pic.twitter.com/Fib2VsqIAJ
— Venkatramanan (@VenkatRamanan_) June 19, 2023
முதலில் இந்த கேரக்டர் பற்றி லாரண்ஸ் என்னிடம் அண்ணே இந்த கேரக்டர் நீங்க தான் பண்ணனும் என்று சொன்னபோது, லாரண்ஸ் முதல் சீனில், ஆடியன்ஸ் என்னை பார்த்து சிரித்துவிட்டாலும் இந்த படம் சூப்பர் டூப்பர் ப்ளாப் ஆகிவிடும். என்னடா இப்படி என்று சொல்லிவிட்டால் அவ்வளவு தான். ஏன்னா இது அப்படியான ஒரு கேரக்டர் என்று சொனேன். ஆனால் அவர் இல்லணே சரியாக இருக்கும், டிரான்ஜெண்டர்ஸ் எல்லோருமே பெரிய உருவமா இருப்பாங்கண்ணே என்று சொன்னார். அதன்பிறகு அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அந்த படத்தில் நான் நடித்த முதல் காட்சி, என் பொண்ணை பற்றி ஸ்டேஜ்ஜில் பேசும் காட்சி தான். அந்த காட்சி நடிக்கும்போது அங்கிருந்தவர்கள் கண்ணே கலங்கிவிட்டது. அப்போதே நினைத்தேன் இந்த படம் வெற்றி பெறும் இந்த கேரக்டர் பேசப்படும் என்று. அதேபோல் இந்த கேரக்டர் பேசப்பட்டது. இந்த படத்தை பார்த்துவிட்டு கோச்சடையான் பட டைமில் லண்டனில் இருந்தபோது ரஜினி சார் சொன்னார். சரத் இந்த படம் பார்த்தேன். நீங்க நடிக்கிறீங்க என்று தெரியாது, ஆனால் நீங்கள் என்ட்ரி ஆன பிறகு, எழுந்து உட்கார்ந்தேன் படம் சூப்பர் என்று சொன்னதாக சரத்குமார் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us