Advertisment

நடிகர் சத்யராஜின் தாயார் மரணம் : திரையுலக பிரபலங்கள் இரங்கல்

நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

author-image
WebDesk
New Update
Sathyaraj Mother

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக கோவையில் இன்று மரணமடைந்தார்.

Advertisment

தென்னிந்திய சினிமாவில் தற்போது முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சத்யராஜூவின் தாய் நாதாம்பாள் காளிங்கராயர். 94 வயதாகும் இவர் கோவையில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக இன்று மாலை 4 மணியளவில் நாதாம்பாள் மரணமடைந்தார். 94 வயதான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அதே பகுதியில் உள்ள கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே இன்று மாலை 4 மணி அளவில் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த மகன் சத்யராஜ் ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்து கோவை விரைந்துள்ளார். அதேபோல சத்யராஜின் தாயார் மரணத்திற்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மேலும் நாளை சத்யராஜின் தாயார் உடல் தகனம் செய்ய இருப்பதால் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் கோவை விரைந்துள்ளனர்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ் மற்றும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி என இரு மகன்கள் உள்ளனர். தொடக்கத்தில் அடியாள் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வந்த சத்யராஜ், பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் திரைத்துறையில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சத்யாராஜ் மணிவண்ணன் இயக்கத்தில் பல வெற்றிகளை கொடுத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியான அமைதிப்படை திரைப்படம் இன்றும் பேசப்படும் ஒரு அரசியல் படமாக உள்ளது.

தற்போது தென்னிந்திய மொழி படங்களில் முக்கிய மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சத்யராஜ், ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment