/indian-express-tamil/media/media_files/2025/11/01/chandrababu-2025-11-01-14-14-23.jpg)
தமிழ் சினிமாவில் காமெடியில் புதுமை செய்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருந்த சந்திரபாபு, சினிமாவில், பல முன்னணி நட்சத்திரங்களுடன் நெருக்கமான நட்புக்கும், சர்ச்சைக்கும் பெயர் பெற்றவர். ஆனாலும், அவரது பெயரில் தபால் தலை வெளியிட சிவாஜி முக்கிய முயற்சி எடுத்துள்ளது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், கதாசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வந்த சந்திரபாபு, பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்டாவராக இருந்துள்ளார். பழம்பெரும் நடிகர், டி.ஆர்,மகாலிங்கம் 1947-ம் ஆண்டு வெளியான தனா அமராவதி என்ற படத்தில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளர். அதன்பிறகு 1951ம் ஆண்டு மோகன சுந்தரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னதுரை படத்தில், டி.ஜி.லிங்கப்பா இசையில், சந்திரபாபு ஒரு பாடலை பாடியிருந்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக யூட்லிங் பாடலை பாடியதும், ஆங்கில பாடலை பாடியதும் சந்திரபாபு தான். அதேபோல் முதல் வெஸ்டர்ன் பாடல்களை பாடியதும் அவர்தான். இப்படி பல திறமைகளை கையில் வைத்திருந்த சந்திரபாபு சில படங்களுக்கு கதையும் எழுதியள்ளார்.
பல திறமைகளை உள்ளடக்கிய ஒருவராக இருந்த சந்திரபாபு, 1961-ம் ஆண்டு பாவ மன்னிப்பு என்ற படத்தில் நடித்திருந்தார். சந்திரபாபு கதை எழுதிய இந்த படத்தை ஏ.பீம்சிங் இயக்கி அவரே தயாரித்திருந்தார், சந்திரபாபுவே நாயகனாக நடித்த இந்த படத்திற்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த நிலையில், பைனான்ஸ் கிடைக்காத காரணத்தால் படம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக இயக்குனர் பீம்சிங் படத்தை ஏ.வி.எம். நிறுவனத்திடம் போட்டு காட்டியுள்ளார்.
படத்தை எடுத்தவரை போட்டு பார்த்த ஏ.வி.எம்.செட்டியார் சந்திரபாபு நடித்தால் இந்த படம் சரியாக இருக்காது. சிவாஜியை வைத்து எடுக்கலாம் என்று சொல்லி அதற்கு முயற்சித்துள்ளனர். முயற்சி வெற்றிகரமாக முடிந்தாலும், இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க சிவாஜியை விட ஒரு ரூபாய் அதிகமாக சம்பளம் வேண்டும் என்று சந்திரபாபு கேட்டு வாங்கியுள்ளார். இப்படி எம்.ஜி.ஆர் சிவாஜி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சந்திரபாபு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். நடிப்பிலும் புதுமையான பல செயல்களை செய்துள்ளார்.
தயாரிப்பாளர் கே.பாலாஜி தன்னை வைத்து தயாரிக்கும் அனைத்து படத்திலும் சந்திரபாபுவை போடுங்கள் என்று சிவாஜி கூறியுள்ளார். மேலும், இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது போன்ற விஷயங்களையும் செய்துள்ளனர். பாபு, பாபு என்று பாசமாக இருந்த சிவாஜி தான், சந்திரபாபு பெயரில் தபால் தலை வெளியிட பெரிய முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த தகவலை சந்திரபாபுவின் சகோதரர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us