அப்பா விட்டு சென்ற கடமை, ஆண்டுதோறும் செய்யும் பிரபு; தலைமுறை கடந்து தொடரும் பொங்கல் சீர்: யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடந்த 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். இந்த படம் இன்றுவரை தமிழ் சினிமாவின் ஒரு ஐகானிக் திரைப்படமாக நிலைத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். இந்த படம் இன்றுவரை தமிழ் சினிமாவின் ஒரு ஐகானிக் திரைப்படமாக நிலைத்திருக்கிறது.

author-image
D. Elayaraja
New Update
Sivaji Prabu Vkram

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பலருக்கும் நிதியுதலி அளித்துள்ளது குறித்து அவ்வப்போது பல பிரபலங்கள் கூறி வரும் நிலையில், தன்னை அறிமுகம் செய்த தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு இன்றுவரை, சிவாஜி வீட்டில் இருந்து பொங்கல் சீர் வரிசை சென்றுகொண்டு இருக்கிறது என்பது புலுரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவில் கடந்த 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். இந்த படம் இன்றுவரை தமிழ் சினிமாவின் ஒரு ஐகானிக் திரைப்படமாக நிலைத்திருக்கிறது. அந்த அளவிற்கு வசனங்களால் ஈர்க்கப்பட்ட இந்த படத்தில், நடித்த சிவாஜி அதன்பிறகு வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று தனது வாழ்நாளின் இறுதிவரை நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்திருந்தார்,

பராசக்தி படத்தின் மூலம் தான் நடிகர் திகலம் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்றால், அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்தவர் யார் என்ற கேள்வி எழும் அல்லவா. அந்த தயாரிப்பாளர் வேறு யாரும் இல்லை நேஷ்னல் பிச்சர்ஸ் பெருமாள் முதலியார் என்பவர் தான். இந்த படத்திற்கு சிவாஜி வேண்டாம் என்று பலரும் சொன்னாலும், சிவாஜி இல்லாமல் இந்த படத்தை நான் எடுக்க மாட்டேன் என்று விடாபிடியாக அவரையே ஹீரோவாக மாற்றியவர் தான் பெருமாள் முதலியார்.

அதேபோல் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சிவாஜி ஒல்லியாக இருந்ததால், அவர் உடல்நலம் தேற வேண்டும் என்பதால், 6 மாதங்களுக:கு படப்படிப்பை நிறுத்தி வைத்து அதன்பிறகு படமாக்கியுள்ளார். தனக்காக இத்தனை சிறப்புகளை செய்து ஹீரோவாக மாற்றிய பெருமாள் முதலியாருக்கு சிவாஜி கணேசன் மட்டும் இல்லாமல், அவரது வம்சமே நன்றியுணர்வோடு நடந்துகொண்டு இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு நெகிழ்ச்சியான தகவல். தனக்கு வாழ்க்கை கொடுத்த பெருமாள் முதலியார் வீட்டுக்கு சிவாஜி ஆண்டுதோறும் பொங்கல் சீர் அனுப்புவது வழக்கம்.

Advertisment
Advertisements

Sivaji agam

சிவாஜி கணேசன், சபரிமலைக்கு மாலை போட்டிருந்த சமயத்தில் பெருமாள் முதலியார் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அப்போது அவருக்காக மாலையை கழற்றிக்கொள்கிறேன் என்று தனது குருநாதரான நம்பியார் சாமியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மாலையை கழற்றியுள்ளார். அதன்பிறகு, பெருமாள் முதலியாரின் இறுதிச்சடங்கு முடியும்வரை அங்கேயே இருந்துள்ளார். இன்றைக்கு சிவாஜி பெருமாள் முதலியார் இருவருமே நம்மிடம் இல்லை என்றாலும், இந்த பொங்கல் சீர் கொடுக்கும் வழக்கம் மட்டும் சிவாஜி குடும்பத்தில் பிரபு மற்றும் அவரது அண்ணன் கணேசன் ஆகியோர் தவறாமல் செய்து வருகின்றனர்.

தற்போது பெருமாள் முதலியார் குடும்பம் சென்னையில் இருந்து வேலூர் சென்றுவிட்டாலும், இப்போதும், பெருமாள் முதலியார் வீட்டுக்கு ஆண்டுதோறும் சிவாஜி கணேசன் வீட்டின் சார்பாக, மரியாதை சென்றுகொண்டிருக்கிறது என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பெருமாள் முதலியாரின் பேரன் தெரிவித்துள்ளார். 

Sivaji Ganesan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: