Vadivelu’s mother passed away due to ill health : நடிகர் வடிவேலுவின் தாயார் இன்று மரணமடைந்த நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ரஜினி விஜயகாந்த் தொடங்கி தற்போது இளம் நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து வரும் வடிவேலு சில வருட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த சமீபத்தில் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், வடிவேலு ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆனாலும் வடிவேலு
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) நேற்று இரவு (ஜனவரி 18) மரமடைந்தார். அவருக்கு வயது 87. இவரின் மரணம் வடிவேலு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வடிவேலுவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ்,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை சரியாகத்தான் இருந்தது. குணமாகிவிட்டது என்று நினைத்து ஊருக்கு போகலாம் என்று முடிவு செய்தபோது நெஞ்சுசளியால் இப்படி ஆகிவிட்டது. பொங்கல் கொண்டாட்டத்தின்போது ஒன்றும் இல்லாமல் இப்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சென்றுவிட்டார் என்று தனது தாயார் குறித்து வடிவேலு உருக்கமாக பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“